டெல்லி: 13வது ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 8லீக் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில், இன்று (அக்-11) 9வது லீக் ஆட்டமாக ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியை சந்திக்கிறது. இந்த போட்டி இன்று மதியம் 2மணிக்கு தொடங்குகிறது.
ஆப்கானிஸ்தான் அணியை பொருத்தவரை உலகக் கோப்பையின் அந்த அணியின் முதல் போட்டியில் தோல்வி அடைந்தது. அதே நேரம் கடந்த 2019ல் நடந்த உலகக் கோப்பையில் இந்த அணி எந்த வெற்றியும் பெறவில்லை. அதனால் அவர்கள் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெரும் முனைப்பில் உள்ளனர்.
அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முக்கிய விக்கெட்களை கைபற்றுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மற்ற சுழற்பந்து வீச்சாளர்களான முஜிப் உர் ரகுமான் மற்றும் முகமது நபி நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உள்ளனர். அதே சமயம் அவர்கள் பேட்டிங்கிலும், நல்ல முறையில் செயல்பட்டால் மட்டுமே வெற்ற பெற்ற முடியும்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தின் இக்கட்டான சூழ்நிலையில் விராட் கோலி - ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியை வெற்றி பெற செய்தனர். அதே போல் பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா அந்த ஆட்டத்தில் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
சுப்மன் கில்லுக்கு உடல் நல குறைவு காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இடம் பெற மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய அணி விளையாடிய கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய 5 போட்டிகளில் அனைத்திலும் தோல்வியையே தழுவியுள்ளது.
கணிக்கப்பட்ட இரு அணிகளுக்கான பிளேயிங் 11
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (வி.கீ), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.
பிட்ச் கண்டிஷன்
அருண் ஜெட்லி மைதானமானது பெரிதும் பேட்டிங்க்கு உதவ கூடியதாக இருக்கிறது. இந்த மைதானத்தில் தான் உலக கோப்பையின் அதிகவேக சதம் அடிக்கப்பட்டது மற்றும் ஆடவர்கான ஒருநாள் உலக கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஸ்கோர் செய்யப்பட்டது. மேலும், முதலில் பேட்டிங் செய்யக்கூடிய அணிதான் அதிக வென்றுள்ளது, இராண்டாவதாக பேட்டிங் செய்து சேஸ் செய்யக்கூடிய அணிக்கு இந்த மைதானம் கடினமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: END VS BAN: வங்கதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!