டெல்லி: 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரும் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை 38வது லீக் போட்டியில் வங்கதேசம், இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. வங்கதேச அணி பவுலர்கள் ஆரம்பம் முதலே கட்டுக்கோப்பாகப் பந்துவீசி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அணி 135 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்த போது இலங்கை வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்ய 3 நிமிடம் தாமதமாகக் களத்திற்கு வந்துள்ளார்.
அப்போது வங்கதேச வீரர் சாகிப் அம்பயரிடம் இது குறித்து முறையிட உடனே அம்பயர் 'timed out' விதிமுறைப்படி அவுட் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மேத்யூஸ் தான் ஹெல்மேட்டை தேடிக் கொண்டிருந்ததால் தாமதமானதாகக் காரணம் கூறினார். ஆனால் அம்பயர் அவரது காரணத்தை ஏற்கவில்லை.
இதனைத் தொடர்ந்து மேத்யூஸ் ஒரு பந்தைக் கூட எதிர் கொள்ளாமல் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். மேத்யூஸ் சர்வதேச அளவில் 'timed out' முறையில் அவுட்டான முதல் வீரரானார். இந்த விவகாரம் இலங்கை வீரர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: IND Vs SA: ஜடேஜாவின் சுழலால் சுருண்டது தென் ஆப்பிரிக்கா.. 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!