சென்னை: ஐசிசி நடத்தும் 13ஆவது ஒருநாள் உலக கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறுகிறது. 50 ஒவர் உலக கோப்பையை இந்திய முழுவதுமாக நடத்துவது இதுவே முதல் முறையாகும். இதுவரை 1987, 1996, 2011 ஆகிய மூன்று முறையுமே இந்தியா மற்ற நாடுகளுடன் சேர்ந்து தான் நடத்தி இருக்கிறது.
இந்த தொடரில் நடப்பு சாம்பியானான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, நெதர்லாந்து, வங்கதேசம் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
2013 ஆண்டில் கைப்பற்றிய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு இந்தியா அணி கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித ஐசிசி கோப்பையை வெல்லாத இந்திய அணி இம்முறை சொந்த மண்ணில் நடப்பதால் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது. ஐசிசி உலக கோப்பை தொடர் நெருங்குவதால் ஒவ்வொரு அணியும் அதற்கு தயாராகி வருகின்றது.
இதையும் படிங்க: சஞ்சு சாம்சனை நிராகரிக்கிறதா பிசிசிஐ? பின்னணி என்ன?
இதனை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு காட்சிபடுத்தப்பட்டது. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலக கோப்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஐசிசி உலக கோப்பையில் முதல் ஆட்டமாக இங்கிலாந்து - நியூசிலாந்து அணி மோதுகின்றன. மேலும், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை சென்னையில் எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: MS Dhoni: தோனி என்னும் சகாப்தம் கேப்டனாக பயணத்தை தொடங்கிய நாள் இன்று!