துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளின் வீரர்களுக்கான தரவரிசை பட்டியல்களை இன்று (செப். 1) வெளியிட்டுள்ளது.
தற்போது இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரும், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரும் தற்போது நடைபெற்று வருகிறது.
முன்னிலையில் ரோஹித்
இந்நிலையில், டெஸ்ட் போட்டியின் முதல் 10 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அதில், ரோஹித் 773 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், கேப்டன் விராட் கோலி 766 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து தொடரின் மூன்றாவது போட்டியில் 19, 59 ரன்களை குவித்திருந்த ரோஹித், முதல்முறையாக ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன், 2017ஆம் ஆண்டில் விராட் கோலி ஐந்தாவது இடத்தில் இருந்தபோது, புஜாரா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருந்தார். இதுதான், கோலியை வேறு இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் முந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
6 வருடங்களுக்கு பிறகு ரூட்
தரவரிசையில், இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 916 புள்ளிகளுடன் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் மூன்று சதங்கள் உள்பட 507 ரன்களுடன் உட்சபட்ச ஃபார்மில் இருந்து வரும் ரூட், கடந்த 2015ஆம் ஆண்டுதான் கடைசியாக முதலிடத்தில் இருந்தார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் இரண்டாவது இடத்தில் இருந்த ரூட், அந்த போட்டியில் 121 ரன்களை குவித்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளி தற்போது முதலிடத்தை பிடித்தார். தற்போது, கேன் வில்லியம்சன், ரூட்டை விட 15 புள்ளிகள் பின்தங்கி, 901 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
-
Other changes in the @MRFWorldwide ICC Men’s Test Player Rankings for the week:
— ICC (@ICC) September 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🔹 Rohit Sharma overtakes Virat Kohli
🔹 James Anderson enters top five
Details 👉 https://t.co/woGyneJVGk pic.twitter.com/9mFl314BS8
">Other changes in the @MRFWorldwide ICC Men’s Test Player Rankings for the week:
— ICC (@ICC) September 1, 2021
🔹 Rohit Sharma overtakes Virat Kohli
🔹 James Anderson enters top five
Details 👉 https://t.co/woGyneJVGk pic.twitter.com/9mFl314BS8Other changes in the @MRFWorldwide ICC Men’s Test Player Rankings for the week:
— ICC (@ICC) September 1, 2021
🔹 Rohit Sharma overtakes Virat Kohli
🔹 James Anderson enters top five
Details 👉 https://t.co/woGyneJVGk pic.twitter.com/9mFl314BS8
இதையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் (891), மார்னஸ் லபுஷேன் (878) ஆகியோர் முறையே மூன்றாம் நான்கு இடத்தில் உள்ளனர். மேலும், இந்திய பேட்ஸ்மேன்கள் புஜாரா மூன்று இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்திலும், நான்கு இடங்கள் பின்தங்கி 12ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஆண்டர்சன் முன்னேற்றம்
டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் பாட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் பும்ரா ஒரு இடம் முன்னேறி ஒன்பதாவது இடத்தில் உள்ளார். முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் முன்னேறி ஐந்தாவது இடத்தை அடைந்துள்ளார்.
இந்தியா உடனான மூன்றாவது போட்டியில் மொத்தம் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருது பெற்ற ஓல்லி ராபின்சன் ஒன்பது இடங்கள் முன்னேறி 36ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
கோலியின் நிலை
ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நான்கு முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேன்களை ஃபேப் ஃபோர் (Fab Four) என்று கிரிக்கெட் உலகில் அழைப்பார்கள். சமீபத்தில் கோலி, தரவரிசையில் ஐந்தாவது இடத்திலிருந்த நிலையில், தற்போது ஆறாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
கோலி தனது 71ஆவது சதத்திற்கு ஒன்றரை ஆண்டுகள் காத்திருக்கும் நிலையில், Fab Fourலிருந்து கோலி வெளியேறிவிட்டாரோ என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஃபராம் அல்ல... க்ளாஸ் தான்!
அதேசமயம், Fab Four என்பது ஃபார்மை வைத்து நிர்ணயிக்கப்படுவது அல்ல. அது டெஸ்ட் அரங்கில் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேன்கள் என்பதன் அடிப்படையில் உருவானது. எனவே ஸ்மித், கோலி, வில்லியம்சன், ரூட் ஆகிய 4 பேர்தான் Fab Four கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.