ETV Bharat / sports

புறா சின்னத்தை பயன்படுத்திய கவாஜா.. தடை விதித்த ஐசிசி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 10:55 PM IST

Usman Khawaja: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான பிரச்சினைக்கு ஆதரவு அளிக்கும் விதமாகத் தனது காலணிகளில் வாசகங்கள் பொரித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் அமைதியைக் குறிக்கும் புறா படத்தைப் பயன்படுத்தியதற்கு ஐசிசி தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Usman Khawaja
Usman Khawaja

மெல்போர்ன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இரண்டு அணிகளுக்குமிடையேயான முதல் டெஸ்ட் கடந்த டிச.18ஆம் தேதி முடிந்தது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா பாலஸ்தீன நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், Freedom is human rights, all lives are equal ( சுதந்திரம் மனிதர்களின் உரிமை, அனைவரும் சமம்) என்ற வாசகங்கள் பொரிக்கப்பட்ட காலணிகளை அணிந்திருந்தார்.

உஸ்மான் கவாஜாவின் இந்த செயலுக்கு, ஐசிசி அவரை கண்டித்திருந்தது. அதேபோல் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடவும் ஐசிசி அவருக்குத் தடை விதித்திருந்தது. உஸ்மான் கவாஜாவின் இந்த செயல் சர்ச்சைக்குள்ளாகிப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பயிற்சியின் போது அவரது பேட் மற்றும் காலணிகளில் அமைதியைக் குறிக்கும் புறாவின் படத்தை அச்சிட்டிருந்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. இந்நிலையில், அமைதியைக் குறிக்கும் புறாவின் படத்தையும் பயன்படுத்த ஐசிசி தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா கூறியதாவது, "ஐசிசி மற்றும் அவர்கள் வைத்திருக்கும் அனைத்து விதிமுறைகளையும் நான் மதிக்கிறேன். நான் அவர்களிடம் கேட்டு அதன் பின் தான் போட்டியிடுவேன். காலணி அது வேறு விஷயம். அதைக் கூறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் எனது கையில் அணிந்திருந்த கருப்பு பட்டையைத் தடை செய்தது எனக்கு ஏன் என்று புரியவில்லை.

பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளின் போது, கருப்பு பட்டை குறித்துக் கேட்டது. அதற்கு இது தனிப்பட்ட காரணங்களுக்காக என்று கூறினேன். நான் வேறு ஏதும் கூறவில்லை. எனது காலணிகளில் வாசகங்கள் எழுதுவதற்கு முன்பு நான் சிந்தித்தேன். மக்கள் வாழும் வெவ்வேறு பகுதிகளிலிருந்தாலும், மதம், சமுகம் எனப் பிரிக்க விரும்பவில்லை. நான் மதத்தை விலகி வைக்கிறேன். ஏன்னெறால் நான் மனிதாபிமான பிரச்ணை குறித்துப் பேசுகிறேன்" என்றார்.

உஸ்மான் கவாஜா பாகிஸ்தானில் பிறந்தவர். 37 வயதாகும் இவர் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுகிறார். இவர் அந்நாட்டிற்காக 66 டெஸ்ட் போட்டிகளும், 40 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 15 சதங்கள் மற்றும் 24 அரைசதங்கள் உட்பட 5004 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் ஒருநாள் போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் உட்பட 1554 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணி.. புகைப்படம் எடுத்துக் கொடுத்த ஆஸ்திரேலிய கேப்டன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.