அண்மையில் நடந்து முடிந்த ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் சுப்மன் கில் மூன்றாவது போட்டியில் சதம் உட்பட மொத்தம் 245 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் அவர் தரவரிசைப் பட்டியலில் 45 இடங்கள் முன்னேறி 38ஆவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
நட்சத்திர வீரர் விராட் கோலி 744 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் நீடிக்கிறார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் விளையாடாத போதிலும் கேப்டன் ரோகித் சர்மா 6ஆவது இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் ஒரு இடம் சரிந்து 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஜாம் 891 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்கள் பட்டியலில், நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட்டும், ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஷகிப் ஆல் ஹசனும் முதலிடத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:சர்வதேச போல்வால்ட் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை 3வது இடம்