லக்னோ: 13ஆவது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 3ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி, இன்று (அக்.7) காலை 10.30 மணிக்கு தரம்சாலா ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி, ஆப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸை தொடக்க ஆட்டக்காரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் தொடங்கினர்.
-
Bangladesh showed all-round dominance to take their opening #CWC23 clash against Afghanistan 👌#BANvAFG 📝: https://t.co/6zxhxDLXtl pic.twitter.com/lkwCci1rIK
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Bangladesh showed all-round dominance to take their opening #CWC23 clash against Afghanistan 👌#BANvAFG 📝: https://t.co/6zxhxDLXtl pic.twitter.com/lkwCci1rIK
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 7, 2023Bangladesh showed all-round dominance to take their opening #CWC23 clash against Afghanistan 👌#BANvAFG 📝: https://t.co/6zxhxDLXtl pic.twitter.com/lkwCci1rIK
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 7, 2023
தொடக்கம் முதலே நிதானமாக ஆடிய இந்த ஜோடி 47 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. இப்ராஹிம் சத்ரான் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த வீரர்களான ரஹ்மத் 18, ஷாஹிதி 18 ரன்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அரைசதம் நோக்கி சென்ற தொடக்க வீரரான குர்பாஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவர் 47 ரன்களில் வெளியேற, அதன் பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழ்ந்தனர். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 37.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாகிப் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
-
A solid effort from Mehidy Hasan Miraz's bat guides the Bangladesh chase 👊#CWC23 | #BANvAFG
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details 👇https://t.co/Kjyv6sYBrr
">A solid effort from Mehidy Hasan Miraz's bat guides the Bangladesh chase 👊#CWC23 | #BANvAFG
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 7, 2023
Details 👇https://t.co/Kjyv6sYBrrA solid effort from Mehidy Hasan Miraz's bat guides the Bangladesh chase 👊#CWC23 | #BANvAFG
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 7, 2023
Details 👇https://t.co/Kjyv6sYBrr
அதனைத் தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க வீரர்களான தன்சித் ஹசன் 5 ரன்களிலும், லிட்டன் தாஸ் 13 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால், அதன் பின் வந்த மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த மெஹிதி ஹசன் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், வங்கதேசம் அணி 34.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ 59 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹீம் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஃபரூக்கி, நவீன்-உல்-ஹக் மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையும் படிங்க: வரலாற்றில் முதல் முறையாக 100 பதக்கங்களை வென்ற இந்தியா - பிரதமர் மோடி வாழ்த்து!