ஹிசர் (ஹரியானா): கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ரோஹித் சர்மாவுடன் இணைந்து யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் உரையாடும் நிகழ்ச்சியின்போது பேசிய யுவராஜ் சிங், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஷ்வேந்திர சாஹல் வெளியிட்ட டிக்டாக் வீடியோ குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசினார்.
அதில், சாஹல் சார்ந்திருக்கும் சாதி குறித்து யுவராஜ் சிங் விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. மேலும் அக்காணொலி சமூக வலைதளங்களிலும் வைரலானது. சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
இதைத்தொடர்ந்து, யுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக மன்னிப்புகோரினார்.
இருப்பினும், யுவராஜ் சிங் மீது ஹரியானா ஹிசர் காவல்துறையினர், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 3 (1), 3 (1எஸ்) உள்ளிட்ட 6 பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, நீண்டநாள்களாக விசாரணையில் இருந்த நிலையில், ஹிசர் காவல் துறையினர் இன்று (அக். 17) யுவராஜ் சிங்கை கைதுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: சர்ச்சை வழக்கில் சிக்கிய யுவராஜ்: 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு!