இந்திய கிரிக்கெட் வீரரும், பிரபல சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங் - நடிகை கீதா பஸ்ரா தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த மகிழ்ச்சியான செய்தி குறித்து ட்வீட் செய்து, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ள ஹர்பஜன், ”நாங்கள் பற்றிக்கொள்ள மற்றொரு சிறு கரம் கிடைத்துள்ளது. இவனது அன்பு பிரம்மாண்டமானது. தங்கம் போன்று விலை உயர்ந்தது. நாங்கள் நிறைவாக உணர்கிறோம். எங்கள் வாழ்க்கை முழுமையடைந்துள்ளது. என் மனைவி கீதாவும் குழந்தையும் நலமுடன் உள்ளனர். எங்களுக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங், நடிகை கீதா பஸ்ராவை 2015ஆம் ஆண்டு, அக்டோபர் 29ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஹினாயா எனும் ஐந்து வயது பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள், இந்த ஆண்டு இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள நிலையில், ஹர்பஜன் அதில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வைரல் வீடியோ: ஹர்லீன் தியோலின் அட்டகாசமான கேட்ச்