செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 போட்டி கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இந்த நிலையில், டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியுள்ளது.
-
UPDATE - Day 1 of the 1st #SAvIND Test has been called off due to rain 🌧️#TeamIndia 208/8 after 59 overs.
— BCCI (@BCCI) December 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
See you tomorrow for Day 2 action.
Scorecard - https://t.co/Zyd5kIcYso pic.twitter.com/tmvVtiwRfJ
">UPDATE - Day 1 of the 1st #SAvIND Test has been called off due to rain 🌧️#TeamIndia 208/8 after 59 overs.
— BCCI (@BCCI) December 26, 2023
See you tomorrow for Day 2 action.
Scorecard - https://t.co/Zyd5kIcYso pic.twitter.com/tmvVtiwRfJUPDATE - Day 1 of the 1st #SAvIND Test has been called off due to rain 🌧️#TeamIndia 208/8 after 59 overs.
— BCCI (@BCCI) December 26, 2023
See you tomorrow for Day 2 action.
Scorecard - https://t.co/Zyd5kIcYso pic.twitter.com/tmvVtiwRfJ
இன்று (டிச.26) தொடங்கிய முதல் போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். ஆனால் தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் நிறைந்திருந்தது.
ரோகித் சர்மா 5 ரன், ஜெய்ஸ்வால் 17, சுப்மன் கில் 2 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சிறிது நேரம் நீடித்து விளையாடியது. 68 ரன்கள் சேர்ந்த இந்த ஜோடியை ககிசோ ரபாடா பிரித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் போல்டாகி 31 ரன்களுடன் வெளியேறினார். அதைதொடர்ந்து விராட் கோலி 38, அஷ்வின் 8, ஷர்துல் தாக்கூர் 24, பும்ரா 1 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து இந்திய அணி 59 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அதேபோல் மார்கோ ஜான்சன் 1 விக்கெட்டும், நந்த்ரே பர்கர் 2 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர். மேலும், இந்திய அணியின் தரப்பில் கே.எல்.ராகுல் 70 ரன்களுடம், சிராஜ் ரன் ஏதும் இன்றி களத்தில் உள்ளனர்.
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விகீ), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
தென் அப்பிரிக்கா: டீன் எல்கர், ஐடன் மார்க்ரம், டோனி டி சோர்ஜி, டெம்பா பவுமா(கேப்டன்), கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரேய்ன்(விகீ), மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா, நந்த்ரே பர்கர்.
இதையும் படிங்க: இறுதிப் போட்டியில் ஏமாற்றம்.. வேகமிகு வீரர்களின் அசாத்திய சாதனைகளால் 2024-இல் வீறுநடை போடுமா இந்திய அணி?