ETV Bharat / sports

20 ஓவர் தொடரை வென்று வரலாறு படைக்குமா பாகிஸ்தான் - முன்னாள் வீரர் பிரத்யேக பேட்டி - Mushtaq Mohammad

வரலாறு மீண்டும் திரும்புகிறது என்பது போல், 30 ஆண்டுகளுக்கு பின் மெல்போர்ன் மைதானத்தில் இங்கிலாந்து அணி, டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

20 ஓவர் உலக கோப்பை
20 ஓவர் உலக கோப்பை
author img

By

Published : Nov 12, 2022, 10:52 PM IST

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கிளைமாக்சான இறுதிப் போட்டி நாளை (நவ.13) வரலாற்று சிறப்பு மிக்க மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. வரலாறு மீண்டும் திரும்புகிறது என்பது போல், 30 ஆண்டுகளுக்கு பின் மெல்போர்ன் மைதானத்தில் இங்கிலாந்து அணி, 20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் கோதாவில் இறங்க உள்ள நிலையில், ஆட்டம் குறித்து முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் முஸ்தாக் முகமது E-TV பாரதத்திற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். 1959 முதல் 1979 காலக்கட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பிரதான ஆல்-ரவுண்டராக இருந்த முஸ்தாக் முகமது, கேப்டனாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை 19 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி உள்ளார்.

E-TV பாரதத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி வருமாறு

கேள்வி: 30 ஆண்டுகளுக்கு பின் அதே மெல்போர்ன் மைதானத்தில் வரலாறு திரும்புகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: ஆமாம் 30 ஆண்டுகளுக்கு பின் அதே மெல்போர்ன் மைதானத்தில் வரலாற்று சிறப்பு மிக்க போட்டி அரங்கேற இருக்கிறது. இந்த போட்டி ஒரு சிறந்த ஆட்டமாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

கேள்வி : இங்கிலாந்து - பாகிஸ்தான். இரு அணிகளையும் எவ்வாறு மதிப்பீடுகிறீர்கள்?

பதில்: உலகின் சிறந்த அணிகளில் இங்கிலாந்தும் ஒன்று என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அதிர்ஷ்டசாலியான பாகிஸ்தான் அணி, பல்வேறு தோல்விகளை சந்தித்து இந்த இடத்துக்கு வந்துள்ளனர். அதேநேரம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அவர்களுக்கு இழக்க ஒன்றுமில்லை. எனவே அவர்கள் எந்தவித அச்சமுமின்றி விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.

கேள்வி: 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் கடந்த வந்த பாதை குறித்து கூறுங்களேன்?

பதில்: தொடரின் தொடக்கத்தில் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வியை தழுவினர். அதன் பிறகும் பாகிஸ்தான் வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பின்னர் மெது மெதுவாக தங்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர். தற்போது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு நன்றாக உள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற நெதர்லாந்து அணி பெரிதும் உதவி உள்ளது. வைல்கார்டு எண்ட்ரி போல், தொடரில் பின்வாசல் வழியாக நுழைய நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய ஆட்டத்தின் முடிவு அமைந்தது.

கேள்வி: 1992, 50 ஓவர் உலக கோப்பை போன்று இந்த முறையும் பாகிஸ்தானின் பயணம் இருக்கும் என நம்புகிறீர்களா?

பதில்: ஆமாம். 1992ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது போல் இந்த முறையும் வெல்வோம் என நம்புகிறேன். கடவுள் பாகிஸ்தான் அணியின் பக்கம் இருக்கிறார். 1992 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தினோம். இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி மகுடம் சூடினோம். அதே போன்று வரலாறு மீண்டும் அமைந்துள்ளது. இந்த முறையிம் வெற்றி பெற அணியை வாழ்த்துகிறேன்.

முஸ்தாக் முகமது
முஸ்தாக் முகமது

கேள்வி: இரு அணிகளையும் ஒப்பிட்டுக் பார்க்க கூறினால் உங்கள் கருத்து என்னவாக இருக்கும்?

பதில்: இரு பக்கமும் ஒப்பிட்டு பார்த்தால் இங்கிலாந்து அணி சிறந்து விளங்குகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் நேர்ததியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆங்கிலேயர்கள் உடல் அளவிலும் சரி, மனதளவிலும் சரி எப்போதும் வலிமையானவர்கள். நடப்பு தொடரில் இங்கிலாந்து ஒரு சிறந்த அணி என எண்ணுகிறேன். அதேநேரம் பாகிஸ்தான் பற்றி கூற வேண்டுமானால் அதிர்ஷ்டவசமாக போட்டிக்குள் நுழைந்து தங்களை நிரூபித்த வரலாறும் அவர்களுக்கு உண்டு. முன்னர் கூறியது போல் அவர்களிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை, வெற்றி பெற முழு மனதுடன் இறங்கி விளையாட வேண்டும்.

கேள்வி: இறுதியாக ஒரு கேள்வி! கேப்டனாக பாபர் அசாம் குறித்து உங்கள் கருத்து?

பதில்: அவர் இன்னும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இப்போதுதான் அவர் கையில் அணி கிடைத்துள்ளது. காலப் போக்கில் அவர் நல்ல நிலையில் இருப்பார் என நினைக்கிறேன்.

இதையும் படிங்க: 'லவ் டுடே' பிரதீப்பை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.