ETV Bharat / sports

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி: அபார வெற்றி பெற்ற இந்தியா! - 3rd ODI result

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ind-vs-eng-3rd-odi-result
ind-vs-eng-3rd-odi-result
author img

By

Published : Mar 28, 2021, 10:45 PM IST

புனே: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி புனேவில் இன்று(மார்ச் 28) நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவுசெய்தது.

இந்திய அணியின் தரப்பில் ரிஷப் பந்த் 78 ரன்களும், ஷிகர் தவான் 67 ரன்களும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களும் குவிக்க, மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி 48.2 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும், ரஷித் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்க வீரர்களான ஜேசன் ராய் 14(6) ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோவ் 1(4) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதிரடி வீரர் ஸ்டோக்ஸ் 35(39) ரன்களிலும், கேப்டன் பட்லர் 15(18) ரன்களிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். அடுத்து நின்ற மாலனும், லிவிங்ஸ்டனும் அணியை சரிவிலிருந்து மீள முயற்சித்தனர். ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பும் தருவாயில், இந்திய அணியின் தற்போதைய மீட்பரான ஷர்துல் தாக்கூர் அடுத்தடுத்து லிவிங்ஸ்டனை 36 (31) ரன்களிலும், மாலனை 50 (50) ரன்களிலும் வெளியேற்றினார்.

பின் வந்த மொயின் அலியும் 29 (25) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாம் கரனும் அதில் ரஷித்தும் சிறிதுநேரம் தாக்குப்பிடித்தனர். இம்முறையும் இந்த இணையை பிரித்தவர் ஷர்துல் தாக்கூர் தான். அதில் ரஷித்தை 19 (22) ரன்களில் வெளியேற்றினார்.

ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தவண்ணம் இருக்க, மற்றொரு பக்கம் சாம் கரன் 45 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தார். அடுத்து வந்த மார்க் வுட் சாம் கரனுக்கு கை கொடுக்க, சாம் கரன் இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

இறுதி 4 ஓவர்களில் 41 தேவைப்பட்ட நிலையில், 47ஆவது ஓவரை தாக்கூர் வீச வந்தார். இந்த ஓவரில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 18 ரன்களை அடிக்க ஆட்டம் திசைத்திரும்பியது. அடுத்த ஓவரை புவனேஷ்வர் குமார் கட்டுக்கோப்பாக வீசி 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இரண்டு ஓவருக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்டியா வீசிய இந்த ஓவரில் தாக்கூரும், நடராஜனும் தவறவிட இங்கிலாந்து வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நடராஜன் பந்துவீச வந்தார். முதல் பந்தில் வுட் ரன்அவுட் ஆனார். இரண்டாவது பந்தில் 1 ரன் எடுக்க, அடுத்த இரண்டு பந்துகளில் ரன் எதுவும் இல்லை. ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடிக்க, ஆறாம் பந்தில் ரன் ஏதும் எடுக்காததால் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் டி20, ஒருநாள் போட்டிகள் என மூன்று போட்டித் தொடர்களையும் வென்று, தாங்கள் தான் துணைக்கண்டத்தின் தூண் என மீண்டும் ஒருமுறை இந்தியா நிரூபித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.