ETV Bharat / sports

IND vs ENG: நிதான ஆட்டம் - முதல் நாள் முடிவில் வலுவான நிலையில் இங்கிலாந்து - எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம்

முதல் இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்த நிலையில், தடுப்பாட்ட முறையில் சிறப்பாக விளையாடி நூறாவது போட்டியில் சதத்தை பூர்த்தி செய்தார் ஜோ ரூட். அவருக்கு பக்கபலமாக டோம் சிப்லேவும் சிறப்பாக ஒத்துழைக்க இந்தியாவுக்கு எதிரான முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

IND vs ENG 1st Test
இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி
author img

By

Published : Feb 5, 2021, 6:42 PM IST

சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், டி20 மற்றும் ஒரு தொடர்களில் பங்கேற்கிறது. முதலாவதாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டி சென்னையிலுள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (பிப். 5) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக பர்ன்ஸ் - சிப்லே களமிறங்கனர். தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இவர்கள் இருவரும் பொறுமையாக ரன்களை குவிக்கத் தொடங்கினார். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 33 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வினின் சூழிலில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் பர்ன்ஸ்.

இவரை அடுத்து களமிறங்கிய லாரன்ஸ், பும்ராவின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட், சிப்லேயுடன் இணைந்து இந்திய பவுலர்களின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். மிகவும் சிறப்பாக ஆடி வந்த ஜோ ரூட் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார்.

மறுமுனையில் ஆமை வேகத்தில் ஆடி வந்த சிப்லேயும் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இவர்கள் இருவரும் இணைந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சிப்லே 87 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ராவின் வேகத்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்.

இன்றைய நாளின் கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் இவர் அவுட்டான நிலையில், எஞ்சிய மூன்று பந்துகள் வீச வேண்டும் என்ற தருவாயில் முதல் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 263 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஜோ ரூட் 128 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளார்.

இந்திய பவுலிங்கைப் பொறுத்தவரை பும்ரா 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளும், அஸ்வின் 68 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

இதையும் படிங்க: 'ஐசிசியின் விருதை தட்டிச் சென்ற ரிஷப்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.