ETV Bharat / sports

இந்தியா திரில் வெற்றி - டெஸ்ட் தொடரில் முன்னிலை - 4ஆவது டெஸ்ட்

India beat England
India beat England
author img

By

Published : Sep 6, 2021, 9:32 PM IST

Updated : Sep 6, 2021, 10:18 PM IST

21:26 September 06

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய அணி. அங்கு நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக சமநிலையில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றன.

இதையடுத்து, நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் நகரின் ஓவல் மைதானத்தில் கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 191 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக, இங்கிலாந்து அணி 290 ரன்கள் எடுத்து 99 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 466 ரன்களைக் குவித்து, இங்கிலாந்து அணிக்கு 367 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. நேற்றைய (செப். 5) நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து 32 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்களை எடுத்திருந்தது.

அந்த அணிக்கு 10 விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில், வெற்றிக்கு 291 ரன்களே தேவைப்பட்டன. தொடக்க வீரர்கள் ஹசீப் ஹமீது 43 ரன்களுடனும், ரோரி பர்ன்ஸ் 31 ரன்களுடனும் இன்றைய (செப். 6) ஐந்தாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர்.  

இருவரும் அரைசதம் நோக்கி சற்று நிதானமாக விளையாடினர். அப்போது, இரண்டாம் இன்னிங்ஸில் ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்தில், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் பர்ன்ஸ். அப்போது அவர் தனது 11ஆவது அரைசதத்தைக் கடந்திருந்தார்.

சிறப்பாக ஆடிவந்த ஹமீத் 63 ரன்களுக்கும், ஒலி போப் 2 ரன்களுக்கும், பேர்ஸ்டோவ், மொயின் அலி ஆகியோர் டக்-அவுட்டாகி வெளியேறினர்.  

இந்தப் போட்டியில் ஒலி போப் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், பும்ரா தனது 100ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் இத்தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிங்க: 23.ம் புலிகேசியும், திமுக எம்எல்ஏக்களும் - அண்ணாமலையின் ஒப்பீடு

Last Updated : Sep 6, 2021, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.