ETV Bharat / sports

England Vs Sri Lanka : இலங்கை அபார வெற்றி! இங்கிலாந்தை ஊதித் தள்ளியது! - இங்கிலாந்து இலங்கை உலக கோப்பை கிரிக்கெட் 2023

world cup cricket 2023 : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Toss
Toss
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 1:34 PM IST

Updated : Oct 26, 2023, 7:25 PM IST

பெங்களூரு : 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.

நடப்பு சீசன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாதி கிணற்றை கடந்துவிட்ட நிலையில், அடுத்த சுற்று வாய்ப்பில் அணிகள் நீடிக்க இனி வரும் ஆட்டங்கள் அனைத்தும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று (அக். 26) நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளார். இங்கிலாந்து அணியின் இன்னிங்சை ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான் ஆகியோர்ன் தொடங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 45 ரன்கள் குவித்தது. டேவிட் மலான் 28 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் மேத்யூஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் குசல் மென்டிசிடம் கேட்ச்சாகி ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 3 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அதே மேத்யூஸ், குசல் மென்டிஸ் ஜோடியால் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டு இருந்த இங்கிலாந்து அணிக்கு மேலும் ஒரு அடியாக மற்றொரு தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் (30 ரன்) ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

இதனிடையே களமிறங்கிய கேப்டன் பட்லர் 8 ரன்கள் மட்டும் சேர்த்து அதிருப்தி அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் வந்த வேகத்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். ஒருபுறம் பென் ஸ்டோக்ஸ் போராட மற்றொரு புறமோ சீட்டுக் கட்டு போல் இங்கிலாந்து அணியின் விக்கெட் வரிசை சரிந்தது.

மொயின் அலி 15 ரன், கிறிஸ் வோக்ஸ் டக் அவுட், நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த பென் ஸ்டோக்ஸ் 43 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 33 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டேவிட் மில்லி 14 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றார்.

இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ஏஞ்சலோ மேத்யூஸ், கசூன் ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் மகீஷ் தீக்‌ஷேனா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 157 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க வீரர் குசல் பெரரா 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 11 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். தொடக்க வீரர் பதும் நிஸன்காவுடன் கைகோர்த்த சதீர சமரவிக்ரமா அணியை சரிவில் இருந்து மீட்டார். இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 25 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்த இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க வீரர் பதும் நிஸன்கா 77 ரன்களும், சதீர சமரவிக்ரமா 65 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். இலங்கை வீரர் லஹிரு குமரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதையும் படிங்க : India Vs England : இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க திட்டம்! அஸ்வினுடன் களமிறங்கும் இந்தியா?

Last Updated : Oct 26, 2023, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.