ஹைதராபாத்: நடப்பாண்டு உலகக் கோப்பையில் மிகவும் சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி விளையாடிய 6 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேவிட் வில்லி இந்த உலகக் கோப்பை தொடருடன் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
-
Thank you, David Willey ❤️ pic.twitter.com/4wkeVGAYXq
— England Cricket (@englandcricket) November 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you, David Willey ❤️ pic.twitter.com/4wkeVGAYXq
— England Cricket (@englandcricket) November 1, 2023Thank you, David Willey ❤️ pic.twitter.com/4wkeVGAYXq
— England Cricket (@englandcricket) November 1, 2023
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளாவது; "இந்த ஒரு நாள் வருவதை நான் எப்போதும் விரும்பவில்லை. ஏனெனில் சிறு வயதிலிருந்தே இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதைக் கனவாக வைத்திருந்தேன். எனவே நிதானமாகச் சிந்தித்து, பரீசிலித்து, இந்த உலகக் கோப்பையுடன் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் நான் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது என்பதை மிகவும் வருத்தத்துடன் உணர்கிறேன்.
உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்த இங்கிலாந்து அணியில் நானும் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கால கட்டத்தில் சில மறக்க முடியாத நினைவுகளுடனும், நல்ல நண்பர்களையும், கடினமான சூழ்நிலைகளையும் பெற்றுள்ளேன். மேலும், இங்கிலாந்து அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடியதில் பெருமைகொள்கிறேன்" என்றார்.
33 வயதான இவர் இங்கிலாந்து அணிக்காக 70 ஒருநாள் போட்டிகள் விளையாடி உள்ளார். அதில் அவர் 94 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அதேபோல் 43 டி20 போட்டிகளில் 51 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்தினர். அதேபோல் அந்த அணி இறுதிப் போட்டி வரை சென்றதற்கு முக்கிய காரணமாக இவர் இருந்திருந்தார். இந்நிலையில் அவர் திடீரென தனது ஓய்வை அறிவித்தது, அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் திடீர் விலகல்! என்ன காரணம்?