ETV Bharat / sports

ENG VS IND: பட்லரின் படையை போட்டுத்தாக்குமா ரோஹித் & கோ - இன்று முதல் டி20 - India Squad

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, சௌதாம்படன் ரோஸ் பவுல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

ENG VS IND
ENG VS IND
author img

By

Published : Jul 7, 2022, 2:41 PM IST

சௌதாம்படன்: இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக 1 டெஸ்ட், 3 டி20, 2 ஒருநாள் போட்டிகள் என்ற மூன்று தொடர்களையும் விளையாட இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதில், ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, 5 போட்டிகள் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. முன்னதாக, 4 டெஸ்ட் போட்டிகள் கடந்தாண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (ஜூலை 7) தொடங்குகிறது. இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் நிலையில், டெஸ்ட் தொடரில் விளையாடிய விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ஜடேஜா, ரிஷப் பந்த், பும்ரா ஆகியோருக்கு இன்றைய போட்டியில் மட்டும் ஒய்வளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த இரு டி20 போட்டிகளில் விளையாடுவார்கள்.

மேலும், அவர்களுக்கு பதில், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் ஐயர், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இன்றைய போட்டியில் மட்டும் விளையாடுவார்கள்.

இயான் மோர்கன் தனது ஓய்வை அறிவித்த பின்னர், இங்கிலாந்து விளையாடும் முதல் டி20 தொடர் இதுவாகும். தற்போது, கேப்டனாக ஜாஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். நெதர்லாந்து அணியை வெளுத்து எடுத்து, தொடரை முழுவதுமாக கைப்பற்றிய இங்கிலாந்து அதே வேகத்துடன் தனது சொந்தமண்ணில் இந்திய அணியை சந்திக்க உள்ளது. டேவிட் மலான், ஜேசன் ராய், லியம் லிவிங்ஸ்டன், மொயின் அலி, சாம் கரண் என நட்சத்திர வீரர்கள் இன்றைய போட்டியில் களமிறங்க காத்திருக்கின்றனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, சௌதாம்படன் ரோஸ் பவுல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா: ராகுல் திரிபாதி, ரோஹித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ரவி பீஷ்னோய். இங்கிலாந்து: டேவிட் மலான், ஹாரி ப்ரூக், ஜேசன் ராய், லியம் லிவிங்ஸ்டன், மொயின் அலி, சாம் கரண், ஜாஸ் பட்லர் (கேப்டன்), பில் சால்ட், கிறிஸ் ஜார்டன், டேவிட் வில்லி, மாட் பார்கின்சன், ரீஸ் டோப்ளி, ரிச்சர்ட் கிளீசன், டைமல் மில்ஸ்.

இதையும் படிங்க: Video: தல தோனி 41ஆவது பிறந்தநாள் - கேக் வெட்டி கொண்டாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.