ETV Bharat / sports

ஐபிஎலில் விளையாட வேண்டாம் - ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தல்! என்ன காரணம்?

பணிச்சுமை மற்றும் உடற்தகுதி காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டாம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Jofra Archer
ஜோஃப்ரா ஆர்ச்சர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 5:39 PM IST

லண்டன்: ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம் வரும் 19ஆம் தேதி துபாயில் நடக்க உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணி வீரரும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டிலை வெளியிட்டது. இதன் மூலம் 10 அணிகளில் 77 வீரர்களின் தேவை உள்ளது. இதனையடுத்து 1166 வீரர்கள், ஐபிஎல் மினி ஏலத்திற்கு தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் 2024 ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, உடற்தகுதியை மீட்டெடுக்கவும், தனது பணிச்சுமையைக் குறைக்கவும். ஐபிஎல் புறக்கணிக்குமாறு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஜோஃப்ரா ஆர்ச்சரை கேட்டுக் கொண்டுள்ளது.

2022 ஐபிஎல் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியால் 8 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சரை. எதிர்பார்த்த அளவிற்கு விளையாட காரணத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிரேட் முறையில் மூலம் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

இந்திய அணியில் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை விட ஜோஃப்ரா ஆர்ச்சரை இங்கிலாந்தில் இருந்தால் அவரின் திறமையை மேலும் மேம்படுத்த எளிதாக இருக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவிக்கிறது.

இதற்கு முன்னதாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஜோ ரூட் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்தான் அறிமுகம் ஆனார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், ஜோ ரூட்டை அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல் சென்னை அணிக்கு 16.25 கோடிக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 2024 ஐபிஎல் போட்டியில் இருந்து, பணிச்சுமை மற்றும் உடற்தகுதி காரணமாக விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதல் பெண்ணாக செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.