ETV Bharat / sports

Cricket World Cup 2023: உலக கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவின் சாதனைகள்! ஒரு லிஸ்டே இருக்கு! - South africa brokes Australia record

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பல சாதனைகளை படைத்து உள்ளது. அதை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

South Africa Team Records
South Africa Team Records
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 8:17 PM IST

டெல்லி: ஐசிசி நடத்தும் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 4வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 428 ரன்கள் குவித்தது. இதன் மூலம் அந்த அணி பல சாதனைகளை படைத்து உள்ளது. இதுவரை ஒரு முறை கூட உலக கோப்பையை வெல்லவில்லை என்றாலும், அவர்களின் சாதனைகள் ஏராளம்.

ஒருநாள் உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் : இந்த ஆண்டு உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் போட்டியாக இலங்கை அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அதிரடியாக விளையாடி 428 ரன்கள் குவித்தது. இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஆஸ்திரேலியா அணி இந்த வரிசையில் முன்னணியில் இருந்தது.

ஒருநாள் உலக கோப்பையில் அதிக முறை 400 ரன்கள் : இலங்கைக்கு எதிராக 428 ரன்கள் எடுத்ததன் மூலம் அதிக முறை உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 400 ரன்களுக்கு மேல் தாண்டிய அணி என்ற பெருமையை தென் ஆப்பிரிக்கா பெற்று உள்ளது. இதுவரை 3 முறை 400 ரன்களை கடந்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இதற்கு முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி 400 ரன்களுக்கு மேல் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பையில் ஒரு அணியில் 3 பேர் சதம் : இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் 3 பேர் சதம் விளாசினர். குயின்டன் டி காக் 100 ரன், ராஸ்சி வேன் டெர் துஸ்சென் 108 ரன், எய்டன் மார்க்ராம் 106 ரன்கள் விளாசினர். ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் ஒரு அணியில் இருந்து 3 பேர் சதம் விளாசியது இதுவே முதல் முறை ஆகும்.

உலக கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்கா வீரரின் சாதனை: இலங்கைக்கு எதிரான இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் எய்டன் மார்க்ராம் 49 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் அதிகவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனைக்கு மார்க்ராம் சொந்தக்காரர் ஆனார்.

  • ✅ The fastest century in Men's World Cup history
    ✅ The highest innings total in Men's World Cup history

    All the records to fall from South Africa's outstanding #CWC23 performance against Sri Lanka ⬇https://t.co/2pAvTldQIY

    — ICC Cricket World Cup (@cricketworldcup) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் சாதனை என்ன? : தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை விளையாடிய ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8 முறை 400 ரன்களுக்கு மேல் கடந்துள்ளது. இந்த அணிக்கு அடுத்ததாக இந்தியா 6 முறை, இங்கிலாந்து 5, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை தலா 2 முறை கடந்துள்ளது.

இதையும் படிங்க: South Africa Vs Srilanka : தென் ஆப்பிரிக்கா வீரர்கள் மூவர் சதம்.. இலங்கைக்கு 429 ரன்கள் இலக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.