கொல்கத்தா: நடப்பாண்டு உலகக் கோப்பை தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 30 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், நாளை 31 வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுமே 6 போட்டிகள் விளையாடி உள்ளன. அதில் பாகிஸ்தான் 2 வெற்றிகளையும், வங்கதேசம் 1 வெற்றியையும் மட்டுமே கைப்பற்றியுள்ளது.
முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற வங்கதேசம் அணி அடுத்த 5 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவியது. இதனால் அந்த அணி அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. தொடர்ந்து சொதப்பி வரும் இந்த அணி பாகிஸ்தானுக்கு எதிரான நாளைய போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறும் முயற்ச்சியில் களம் இறங்க உள்ளது.
மறுபக்கம் பாகிஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. உலக கோப்பையின் தொடக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அணி தொடர் தோல்விகளைப் பெற்றது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி, போட்டியின் இறுதி வரை போராடியே தோற்றது. அவர்கள் செய்யும் தவற்றைத் திருத்திக் கொள்ளும் பட்சத்தில் வரும் போட்டிகளில் வெற்றி பெறலாம்.
மோதும் அணிகள்: பாகிஸ்தான் - வங்கதேசம்.
நேரம்: பிற்பகல் 2 மணி.
இடம்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா.
கணிக்கப்பட்ட இரு அணிகளுக்கான பிளேயிங் 11
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் (அல்லது) ஃபக்கர் ஜமான், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விகீ), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான் (அல்லது) உசாமா மிர், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப்.
வங்கதேசம்: லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விகீ), மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன், மஹேதி ஹசன் (அல்லது) நாசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்.
இதையும் படிங்க: மக்களை தேடி மேயர் திட்டம்; 1,640 மனுக்களில் 1,191 மனுக்கள் மீது தீர்வு: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தகவல்!