கொல்கத்தா: ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 30 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், 31வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதின.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் களம் இறங்கினர். ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தன்சித் ஹசன் டக் அவுட் ஆக, அதன்பின் வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 4 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹீம் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
-
Pacers run riot in Kolkata 🔥@Wasim_Jnr cleans up the tail after @iShaheenAfridi became the joint-leading wicket-taker in the tournament 🙌#PAKvBAN | #CWC23 | #DattKePakistani pic.twitter.com/AWrhfTtnij
— Pakistan Cricket (@TheRealPCB) October 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Pacers run riot in Kolkata 🔥@Wasim_Jnr cleans up the tail after @iShaheenAfridi became the joint-leading wicket-taker in the tournament 🙌#PAKvBAN | #CWC23 | #DattKePakistani pic.twitter.com/AWrhfTtnij
— Pakistan Cricket (@TheRealPCB) October 31, 2023Pacers run riot in Kolkata 🔥@Wasim_Jnr cleans up the tail after @iShaheenAfridi became the joint-leading wicket-taker in the tournament 🙌#PAKvBAN | #CWC23 | #DattKePakistani pic.twitter.com/AWrhfTtnij
— Pakistan Cricket (@TheRealPCB) October 31, 2023
அதனைத் தொடர்ந்து களம் புகுந்த மஹ்முதுல்லாஹ் - லிட்டன் தாஸுடன் கைகோர்க்க இந்த கூட்டணி அணிக்கு நிதானமாக ரன்களை சேர்த்து வந்தது. அரைசதத்தை நெருங்கிய லிட்டன் தாஸ் அணி 102 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். அவர் 45 ரன்கள் சேர்த்து வெளியேறினார். மறுபக்கம் இருந்த முஹ்முதுல்லாஹ் அரைசதம் கடந்து 56 ரன்களுக்கு வெளியேறினார்.
இதையடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஓரளவு விளையாடி முறையே 43, 25 ரன்களும் எடுத்தனர். இறுதியில் வங்கதேசம் அணி 45.1 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக முகமது வாசிம் மற்றும் ஷஹீன் அப்ரிடி தலா 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர். இதனைத் தொடர்ந்து 205 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது பாகிஸ்தான் அணி.
-
Pakistan win by seven wickets and 105 balls to spare! 👏@iMRizwanPak and @IftiMania give the finishing touches after brilliant knocks by the openers 👊#PAKvBAN | #CWC23 | #DattKePakistani pic.twitter.com/qmKwP26G8H
— Pakistan Cricket (@TheRealPCB) October 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Pakistan win by seven wickets and 105 balls to spare! 👏@iMRizwanPak and @IftiMania give the finishing touches after brilliant knocks by the openers 👊#PAKvBAN | #CWC23 | #DattKePakistani pic.twitter.com/qmKwP26G8H
— Pakistan Cricket (@TheRealPCB) October 31, 2023Pakistan win by seven wickets and 105 balls to spare! 👏@iMRizwanPak and @IftiMania give the finishing touches after brilliant knocks by the openers 👊#PAKvBAN | #CWC23 | #DattKePakistani pic.twitter.com/qmKwP26G8H
— Pakistan Cricket (@TheRealPCB) October 31, 2023
தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபீக் - ஃபகார் ஜமான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த இந்த இருவரும் அரைசதம் கடந்து தொடர்ந்து சிறப்பாக விளையாடினர். முதல் விக்கெட்டை இவர்கள் இழப்பதற்கு 128 ரன்கள் தேவைபட்டது. அப்துல்லா ஷபீக் 68 ரன்களுக்கு அட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ஃபகார் ஜமான் 81 ரன்களிலும், பாபர் அசாம் 9 ரன்களிலும் வெளியேறினர்.
அதன்பின் களம் வந்த ரிஸ்வான் மற்றும் இப்திகார் அகமது அணியை வெற்றி பெற செய்தனர். 32.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டினர். ரிஸ்வான் 26 ரன்களுடனும், இப்திகார் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி புள்ளிபட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருது.. 8வது முறையாக வென்ற மெஸ்ஸி!