பெங்களூரு: ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதன் 18வது லீக் போட்டியாக ஆஸ்திரேயா - பாகிஸ்தான் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று (அக்.20) மோதி வருகின்றன.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த மூன்று போட்டிகளில், முதல் இரு போட்டிகளில் வென்றது. அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தோல்வியை கண்டது. அதனால் இந்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடம் களம் இறங்கி உள்ளது.
மறுபக்கம் ஐந்து முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, நடப்பாண்டு உலகக் கோப்பையில் விளையாடிய மூன்று போட்டிகளில், இரண்டு போட்டிகளில் வீழ்ந்தது. இலங்கைக்கு எதிரான கடந்த போட்டியில் தான் அந்த அணி தனது முதல் வெற்றியை பெற்றது. அதே வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி.
பலத்த பாதுகாப்பு: உலகக் கோப்பையின் போட்டிகளில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுவாகும். எனவே மைதானத்தை சுற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பி. தயானந்த் கூறியதாவது; "நடப்பாண்டு உலகக் கோப்பை போட்டியில் முதல் போட்டி இங்கு நடைபெறுவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கிரிக்கெட் பிரியர்கள் பலர் வாடகை கார்கள் மற்றும் அரசு போருந்துகள் மூலம் இங்கு வந்து செல்கின்றனர். மேலும், மைதானத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட சுவரொட்டிகளை தவிர்த்து வேறு சுவரொட்டிகளை கொண்டு செல்வதற்கு அணுமதிக்கப்படவில்லை. அதேபோல் மைதானமானது ட்ரோன் மூலம் முழுவதுமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: Pakistan VS Australia : டாஸ் வென்று பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு!