லக்னோ: ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தொடரின் 34வது லீக் ஆட்டம் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணி மோதின.
டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களான வெஸ்லி பாரேசி மற்றும் மேக்ஸ் ஓ'டவுட் களம் இறங்கினர். ஆனால், ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாத வெஸ்லி 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர், ஓ'டவுட் மற்றும் கொலின் அக்கர்மேன் பொறுப்புடன் ஆட, ஸ்கோர் 73 ஆக இருந்தபோது, ஓ'டவுட் ரன் அவுட் ஆனார். இதனைத்தொடர்ந்து ஸ்காட் எட்வர்ட்ஸ் 0, பாஸ் டி லீடே 3, சாகிப் சுல்பிகர் 3, லோகன் வான் பீக் 2 ரன்கள் என அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
-
📸📸: Enjoy snapshots from AfghanAtalan's incredible bowling performances in Lucknow! 👍#AfghanAtalan | #CWC23 | #AFGvNED | #WarzaMaidanGata pic.twitter.com/gFP9SMkBy0
— Afghanistan Cricket Board (@ACBofficials) November 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">📸📸: Enjoy snapshots from AfghanAtalan's incredible bowling performances in Lucknow! 👍#AfghanAtalan | #CWC23 | #AFGvNED | #WarzaMaidanGata pic.twitter.com/gFP9SMkBy0
— Afghanistan Cricket Board (@ACBofficials) November 3, 2023📸📸: Enjoy snapshots from AfghanAtalan's incredible bowling performances in Lucknow! 👍#AfghanAtalan | #CWC23 | #AFGvNED | #WarzaMaidanGata pic.twitter.com/gFP9SMkBy0
— Afghanistan Cricket Board (@ACBofficials) November 3, 2023
அதிகபட்சமாக சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மட்டுமே 58 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை 150 கடக்க செய்தார். இறுதியில், 46.3 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு 'ஆல் அவுட்' ஆனது. ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது நபி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
-
Afghanistan Bundle the Netherlands out for 179! 👊#AfghanAtalan, banking on some incredible bowling from @MohammadNabi007 (3/28) & @noor_ahmad_15 (2/28) and some outstanding fielding efforts by the team, bundled out the @KNCBcricket for 179 runs in the 1st inning. 🤩👏#CWC23 pic.twitter.com/VB1ddZfHx9
— Afghanistan Cricket Board (@ACBofficials) November 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Afghanistan Bundle the Netherlands out for 179! 👊#AfghanAtalan, banking on some incredible bowling from @MohammadNabi007 (3/28) & @noor_ahmad_15 (2/28) and some outstanding fielding efforts by the team, bundled out the @KNCBcricket for 179 runs in the 1st inning. 🤩👏#CWC23 pic.twitter.com/VB1ddZfHx9
— Afghanistan Cricket Board (@ACBofficials) November 3, 2023Afghanistan Bundle the Netherlands out for 179! 👊#AfghanAtalan, banking on some incredible bowling from @MohammadNabi007 (3/28) & @noor_ahmad_15 (2/28) and some outstanding fielding efforts by the team, bundled out the @KNCBcricket for 179 runs in the 1st inning. 🤩👏#CWC23 pic.twitter.com/VB1ddZfHx9
— Afghanistan Cricket Board (@ACBofficials) November 3, 2023
இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் பெரிதாக களத்தில் நீடிக்கவில்லை. குர்பாஸ் 10 ரன்களிலும் சத்ரான் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த ரஹ்மத் ஷா, சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்க்க அணி வெற்றிப் பாதையை நோக்கிச் சென்றது. அரைசதம் கடந்த ரஹ்மத் ஷா 52 ரன்களில் வெளியேறினார். பின்னர், கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி - அஸ்மத்துல்லா உமர்சாய் சேர, நிதானமாக விளையாடி அணியை வெற்றிப்பெற செய்தனர்.
-
𝐀𝐅𝐆𝐇𝐀𝐍𝐈𝐒𝐓𝐀𝐍 𝐖𝐈𝐍! 🙌#AfghanAtalan, led by half-centuries from the skipper @Hashmat_50 (56*) and @RahmatShah_08 (52), successfully chased down the target by 7 wickets to register 4th victory at the ICC #CWC23. 👍
— Afghanistan Cricket Board (@ACBofficials) November 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Well done Atalano! 👏#AFGvNED | #WarzaMaidanGata pic.twitter.com/zNLiW1Fakx
">𝐀𝐅𝐆𝐇𝐀𝐍𝐈𝐒𝐓𝐀𝐍 𝐖𝐈𝐍! 🙌#AfghanAtalan, led by half-centuries from the skipper @Hashmat_50 (56*) and @RahmatShah_08 (52), successfully chased down the target by 7 wickets to register 4th victory at the ICC #CWC23. 👍
— Afghanistan Cricket Board (@ACBofficials) November 3, 2023
Well done Atalano! 👏#AFGvNED | #WarzaMaidanGata pic.twitter.com/zNLiW1Fakx𝐀𝐅𝐆𝐇𝐀𝐍𝐈𝐒𝐓𝐀𝐍 𝐖𝐈𝐍! 🙌#AfghanAtalan, led by half-centuries from the skipper @Hashmat_50 (56*) and @RahmatShah_08 (52), successfully chased down the target by 7 wickets to register 4th victory at the ICC #CWC23. 👍
— Afghanistan Cricket Board (@ACBofficials) November 3, 2023
Well done Atalano! 👏#AFGvNED | #WarzaMaidanGata pic.twitter.com/zNLiW1Fakx
31.3 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 181 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. ஷாஹிதி 56 ரன்களுடனும், உமர்சாய் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: Rohit Sharma: எங்களின் முதல் இலக்காக இருந்தது இதுதான்.. அரையிறுதி தகுதி குறித்து ரோகித் சர்மா!