ETV Bharat / sports

ஸ்டீவ் ஸ்மித் அபாரம்; இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

author img

By

Published : May 25, 2019, 11:53 PM IST

லண்டன்: உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஸ்டீவ் ஸ்மித்

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆணிகள் விளையாடின. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதனையடுத்து தொடக்க வீரர்களாக வார்னர் - கேப்டன் பின்ச் ஜோடி களமிறங்கியது. இதில் கேப்டன் பின்ச் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் வார்னர் - மார்ஷ் ஜோடி நிதானமான ஆடினர். தொடர்ந்து வார்னர் 43 ரன்களில் ஆட்டமிழக்க, மார்ஷ் 30 ரன்களில் வெளியேறினார்.

ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்

தடைக்கு பின்னர் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஒரு முனையில் ரன்கள் சேர்க்க, பின்னர் வந்த வீரர்களில் கவாஜா 31 ரன்களும், கேரி 30 ரன்களும் எடுத்து வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக ஆடி சதம் விளாசினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்மித் 116 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான பெயர்ஸ்டோவ் 12 ரன்களும், ராய் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, வின்ஸ் - பட்லர் ஜோடி ஆஸ்திரேலிய அணியின் தாக்குதல் சிறப்பாக எதிர்கொண்டது. பின்னர் அதிரடியாக ஆடிய பட்லர் 52 ரன்களில் ஆட்டமிழக்க, வின்ஸ் 64 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா அணி

இதனையடுத்து களமிறங்கிய வீரர்களில் கிறிஸ் வோக்ஸ் மட்டும் 40 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு போராடினார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக ரிச்சர்ட்சன், பெஹ்ரண்டார்ஃப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஸ்டீவ் ஸ்மித்
வின்ஸ் விக்கெட்டை வீழ்த்திய பெஹ்ரண்டார்ஃப்

Intro:Body:

World cup 2019 - AUS vs ENG warm up match

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.