ETV Bharat / sports

"பன்முகத்தன்மை இல்லாமல் கிரிக்கெட் ஒன்றுமில்லை" -ஐசிசி - George Floyd

அமெரிக்காவில் காவல் துறையினரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ப்ளாய்டுக்கு நீதி கேட்டு நடத்தப்பட்டு வரும் போராட்டத்தின் ஒருபகுதியாக  "கிரிக்கெட் பன்முகத்தன்மை இல்லாமல் ஒன்றுமில்லை" என்று ஐ.சி.சி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

without-diversity-cricket-is-nothing-icc-stands-against-racism

author img

By

Published : Jun 5, 2020, 6:55 PM IST

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்டு என்பவர் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துவருகிறது. பல்வேறு நாடுகளிலும் இச்சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் ஐசிசி தனது ட்விட்டர் பதிவில், 'பன்முகத்தன்மை இல்லாமல் கிரிக்கெட் ஒன்றும் இல்லை. அப்படி பன்முகத்தன்மை இல்லாமல் உங்களால் ஒரு படத்தையும் பார்க்க இயலாது' என பதிவிட்டு, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது குறித்த 90 விநாடி காணொலியையும் பகிர்ந்துள்ளது.

ஐசிசியின் இக்காணொலியில், இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த பல நாட்டு வீரர்கள் ஒரு அணியாக செயல்பட்டு உலகக்கோப்பையை வென்றது குறித்து விளக்கியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.