நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இவரது சிறப்பான பேட்டிங் மூலம் நியூசிலாந்து அணி இன்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.
இந்த தொடரில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரான மார்டின் கப்தில் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தார். இதனால், பலமுறை இக்கட்டான நிலையில் இருந்த நியூசிலாந்து அணியை அவர் கரைசேர்த்துள்ளார்.
குறிப்பாக, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சதம். இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அரைசதம் என இந்தத் தொடரில் வில்லிம்யசன் தனது பேட்டில் அடித்ததெல்லாம் மேஜிக்காகவே இருந்தது.
இந்நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றுவரும் இறுதிப் போட்டியில் இவர் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். இதன்மூலம், உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.
இவர் இந்த தொடரில், 9 போட்டிகளில் பேட்டிங் செய்த நிலையில் 578 ரன்களை எடுத்துள்ளார். இதனால், 2007இல் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே (548 ரன்கள்) படைத்த சாதனையை முறியடித்துள்ளார் கேன் வில்லியம்சன்.