ETV Bharat / sports

கொஞ்சம் ஒதுங்கிரு... ஓடு பதுங்கிரு... வர்றது தலைவரு... விராட் கோலி பராக்..! - பாகம் 2

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி குறித்த இரண்டாவது தொகுப்பு.

விராட் கோலி பராக்...! - பாகம் 2
author img

By

Published : May 29, 2019, 9:24 PM IST

இந்திய அணிக்குள் இடம்பிடித்த சில நாட்களிலேயே உலகக்கோப்பை வென்ற மகிழ்ச்சியை விராட் கோலி பெற்றார். ஆனால் அந்த உலகக்கோப்பைக்காக இந்திய மக்கள் 28 ஆண்டுகள் தவம் கிடந்தனர். சீனியர் வீரர்கள் உலகக்கோப்பை வென்றதை உணர்ச்சிபெருக்கில் கொண்டாடியபோது மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலை ஏற்படவில்லை என சில நாட்களுக்கு முன்னால் தெரிவித்தார். ஆனால் அதே விராட் கோலிக்கு 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அடைந்த தோல்வியை தாண்டி வருவதற்கு எவ்வளவுக் காலம் எடுத்தது என அனைவருக்கும் தெரியும்... பதுங்கிய புலி தற்போது பாய்வதற்காக காத்திருக்கொண்டிருப்பது போல் அடுத்த தொடருக்கு சென்றது இந்திய அணி.!

virat kohli
ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட் ஆன கோலி

அதனையடுத்து இந்திய அணி இங்கிலாந்து. ஆஸ்திரேலிய நாட்டிற்கு பயணப்படுகிறது. இங்கிலாந்தில் இந்திய அணிக்கு மிகப்பெரிய அடி. இந்தியாவின் சுவர் ராகுல் டிராவிடைத் தவிர அனைவரையும் சொல்லி வைத்து விக்கெட் வீழ்த்துகிறார் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன். அங்கே தொடங்குகிறது விராட் கோலி - ஆண்டர்சன் இருவருக்கிடையேயான யுத்தம்.

தொடர்ந்து பயணப்பட்ட ஆஸ்திரேலிய தொடரிலும் இந்திய அணிக்கு பெரிய அடி. ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தினாலும், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை உலகக்கோப்பையை வென்ற அணி என்ற எந்தவிதமான கருணையில்லாமல் புரட்டி எடுக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு பயணப்படுகிற அணிக்கு உளவியல் ரீதியாக பத்திரிக்கைகளும், நேரடியாக ரசிகர்களும் கிண்டல் செய்தே எதிரணியினரை பலவீனப்படுத்துவார்கள். ஆஸ்திரேலியாவின் எஸ்சிஜி மைதானத்தில் விராட் கோலி எல்லைக்கோட்டிற்கு அருகில் நிற்கும்போது ரசிகர்கள் விராட்டை ஸ்லெட்ஜிங் செய்வார்கள். ஆனால் ரசிகர்களுக்கு எந்த கிரிக்கெட் வீரர்களும் அதுவரை பதிலளித்ததில்லை. ஆனால் விராட் தனது நடுவிரலை தூக்கி ரசிகர்களிடம் காட்டுகிறார். இந்திய ரசிகர்களுக்கோ ஆச்சரியம். கங்குலிக்கு பிறகு போட்டியில் மட்டுமே ஆக்ரோஷம் காண்பித்த இந்திய வீரர்கள் மத்தியில் களத்தில் ஆக்ரோஷம் என்றால் என்ன என்று தனது செய்கையால் விராட் பதிலளித்தார்.

virat kohli
தன்னை சீண்டிய ரசிகர்களுக்கு நடுவிரல் காண்பித்த கோலி

அங்கிருந்துதான் விராட் கோலிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகத்தொடங்குகிறது. ஆக்ரோஷம் என்றால் களத்தில் மட்டுமல்லா எனது பேட்டும் பேசும் என விராட் கோலி தனது பேட்டிங்கால் செய்து காட்டுகிறார். அங்கலிருந்து சர்வதேச பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக வளர்கிறார். சதங்களும், அரைசதங்களும் தொடர்ந்து அடிக்கப்பட்டு வருகிறது. சாதனைகளை தகர்த்து எறிகிறார் கோலி என்னும் நாயகன்.

உலக கிரிக்கெட்டை தனது அசாத்தியமான பந்துவீச்சால் நடுங்க வைத்துக்கொண்டிருந்த மலிங்காவை, தனது வித்தைகளால் பொளந்து கட்டினார். ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள். அதுவும் மலிங்கா போன்ற துல்லிய பந்துவீச்சாளரின் பந்துகளில்...

virat kohli
கோலி

எவ்வளவுதான் ஒருநாள் போட்டிகளில் சாதனைகளும், சதங்களும் அடித்தாலும் வெளிநாட்டில் கோலி சிறுபிள்ளை என்ற பெயர் தான் சர்வதேச கிரிக்கெட் கொடுக்கிறது.

அடுத்ததாக அந்த சாதனையையும் நான் முறியடிக்கிறேன் என்பதற்காகவே களமிறங்கியதுபோல், ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்த இந்திய அணியில் ஒற்றை ஆளாய் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு தனது பேட்டால் பதில் கொடுக்கிறார். ஆடிய நான்கு போட்டிகளில் நான்கு சதங்கள் விளாசுகிறார். சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களின் கண்கள் சச்சினுக்கு பிறகு விராட் கோலி என்னும் இளைஞனை உற்று நோக்குகிறது.

அந்த தொடரில் அப்போதைய கேப்டன் தோனி, டிரா செய்வதற்காக விளையாடலாம் என்று பேசுகையில் வெற்றிக்காக விளையாடலாம் என்று விராட் கோலி பேசுவார். அதன் பின்னர் விராட் கோலியின் மீதான நம்பிக்கையால், தோனி கேப்டன்சியை துறக்கிறார். கோலி டெஸ்ட் கேப்டனாகிறார். மூன்றாவது நான்காவது போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகள், விராட் கோலியின் மனதிடத்திற்கு ஏற்றவாறு வெற்றிக்காக விளையாடுகிறது. ஆனாலும் தோல்வியால் தொடரை இழக்கிறது.

அதனையடுத்து 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் விராட் கோலி இந்தியாவிற்காக வென்றெடுப்பார் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்க, விராட் பெரிய தொடர்களில் ரன் குவிக்க தடுமாறுவதைத் தொடர்ந்தார். உலகக்கோப்பையில் தோல்வியடைந்ததற்கு தனது காதலி அனுஷ்கா ஷர்மாதான் காரணம் என பத்திரிக்கைகள் எழுதியதற்கு, விமான நிலையத்திற்கு காதலியோடு வந்திறங்கி அனைவருக்கும் பதில் கூறினார்.

virat kohli
2015 உலகக் கோப்பை அரையிறுதியில் சொதப்பிய கோலி

விராட் கோலிக்கு என்று ஒரு சுபாவம் உள்ளது. அது என்னவென்றால், எங்கே தன்னை இழிவுபடுத்துகிறார்களோ அங்கேயே சென்று தான் யார் என்பதை நிரூபித்துவிட்டுத் தான் வெளிவருவார். உலகக்கோப்பையில் அடைந்த தோல்விக்கு பிறகு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையிலும் இந்திய அணி தோல்வியடைகிறது. கலங்கிபோகிறார் விராட் கோலி. அன்றைய தினம் கோலி கண்கள் கலங்கி முதன்முறையாக இந்திய ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

பின்னர் தோனி அனைத்து வகையான கேப்டன்சிகளையும் உதறிவிட்டு, கேப்டன்சியை விராட் கோலியிடம் ஒப்படைக்கிறார். உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியினர் பட்டையை கிளப்புகிறார்கள். இந்திய ரசிகர்கள் கோலியை கொண்டாடினாலும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்தில் நன்றாக விளையாடட்டும். நாங்கள் விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என ஒத்துக்கொள்கிறோம் என வெளிநாட்டு ஊடகங்களும், விமர்சகர்களும் கங்கனம்கட்டி கொண்டு பேசினார்கள்.

இந்திய அணி தென்னாப்பிக்காவுக்கு பயணப்படுகிறது. ரபாடா, ஸ்டெயின், மார்கல், பில்லண்டர் என மிரட்டலான பந்துவீச்சுக் கூட்டணி. அதேபோல் இந்தியாவை சாய்க்க வேண்டும் என வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் என தொடரின் தொடக்கமே அட்டகாசப்படுத்தியது. ஆனால் வேகப்பந்துவீச்சால் இந்திய அணியை சாய்க்க நினைத்த தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய பந்துவீச்சாளர்கள் அசுரனாய் அமைந்தனர். முதல் போட்டியிலேயே கோலி சறுக்கினாலும், இரண்டாவது போட்டியில் சினம் கொண்ட சிங்கமாய் பாய்ந்தடித்தார். மற்ற வீரர்களிடம் இருந்து பெரிய பார்ட்னர்ஷிப் கிடைக்காத நிலையிலும், சோலோ சிங்மாய் 153 ரன்கள். ஆனாலும் இரண்டாவது போட்டிலும் தோல்வி. முன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டில் தோல்வியடைந்து தொடரை இழந்துவிட்டோம் என நினைக்காமல், முத்திரையை பதிக்க முடிய செய்தது கோலியின் அணி.

virat kohli
தென்னாப்பிரிக்காவில் மிரட்டிய கோலி

மூன்றாவது போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பிட்ச் ஆடும் பந்துகள் முகத்திற்கு நேராக வர, இந்திய வீரர்கள் எதற்கும் பயப்படாமல் விளையாடினார். தென்னாப்பிரிக்க அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பும்ராவும், புவியும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை சொடுக்குபோட்டு சவாலுக்கு அழைத்தனர். இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க அணி, விராட் கோலியிடம் ஆட்டத்தை முடித்து கொள்ளலாமா என கேட்க, வெற்றிபெற்றவுடன் நாம் பேசி கொள்வோம் சொந்த ஊரிலேயே தென்னாப்பிரிக்காவை வம்பிழுத்தார். மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது.

virat kohli
தென்னாப்பிரிக்காவில் சதம் விளாசிய கோலி

அடுத்ததாக ஒருநாள் தொடர். 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 5-1 எனக் கைப்பற்றியது. அதில் விராட் கோலி மூன்று சதம். அதிலும் மூன்றாவது போட்டியில் ஆடிய அந்த ஆட்டம், இந்திய ரசிகர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்து செல்கையில், நிதானமாக ஆடி, பின்னர் ஒரு கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அப்போது ரபாடா பந்தை ஒரு ஷாட் ஆடுவார். கோலியின் கவர் ட்ரைவை ரசிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் அந்த ஷாட்.. நெஞ்சிற்கு வந்த பந்தை ஸ்ட்ரைட் டிரைவ் மூலம் சிக்ஸராக மாற்றுவார். இதுபோதும் என கோலியின் ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினர்.

virat kohli
ஆண்டர்சன் - கோலி

பின்னர் இந்திய அணி இங்கிலாந்துக்கு பயணப்படுகிறது. மீண்டும் பழைய நினைவுகளை சுட்டிக் காட்டப்படுகிறது. போதாக்குறைக்கு ஆண்டர்சன் கோலியை சீண்டுகிறார். விராட் கோலி விக்கெட்டை நிச்சயம் வீழ்த்துவேன் என பேட்டியளிக்கிறார்.

என்னை சீண்டினால் என்ன நடக்கும் என்று அந்நிய மண்ணிலும் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கோலி நினைத்திருப்பாரோ என்னவோ... தன்னை வம்புக்கு இழுத்த ஆண்டர்சன், பிராடு, சென்னை போட்டியின்போது சீண்டிய ஸ்டோக்ஸ் என எல்லோருக்கும் முதல் போட்டியிலேயே 149 ரன்கள் குவித்து அனைவருக்கும் பதில் கொடுத்துவிட்டார். விக்கெட் எடுப்பதாக கூறிய ஆண்டர்சனால் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. 5 டெஸ்ட் போட்டிகளில் 593 ரன்கள். கிட்டதட்ட 60 ஆவரேஜ். இங்கிலாந்து ரசிகர்களே கோலியை கிரிக்கெட்டின் இளவரசன் என அழைக்கத் தொடங்கினர்.

virat kohli
இங்கிலாந்து மண்ணில் சதம் விளாசி விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ரன்மிஷன் கோலி

அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணப்படுகிறது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணி தங்களின் விளம்பரங்களில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கிரிக்கெட் ஆட வருகிறான். நீங்கள் பார்க்க வருகிறீர்களா என கொண்டாடியது. ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியர்களை வெல்ல வேண்டும் என்ற முன் முடிவோடு இந்தியப் படை களமிறங்கியது. ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இல்லாமல் நம்பிக்கையில்லாமல் ஆடிய ஆஸ்திரேலிய அணியை நசுக்கிபோட்டது இந்திய அணி. முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தொடரை வென்று சாதனைப் படைத்தது.

என்னதான் இக்காலத்தில் பேட்ஸ்மேன்கள் கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்தினாலும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மைதானங்களில் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆண்டர்சன், பிராடு, ஸ்டெயின், ரபாடா, மார்கல், பில்லண்டர், மஹராஜ், இங்கிடி, ஸ்டார்க், மார்க் வுட், வில்லி, மலிங்கா, போல்ட், டிம் சவுதி, பாட் கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகியோர் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் கொடுத்து வந்தனர். இவர்கள் அனைவராலும் விராட் கோலியின் ரன் வேட்டையை கட்டுப்படுத்த முடியவில்லை.

virat kohli
பேட்டிங் செய்ய களமிறங்கிய கோலி

ஒரு ஊருக்கு சென்று அவமானப்பட்டு வந்தால், திரும்ப அதே இடத்திற்கு செல்கையில் தனது தனித்துவமான முத்திரையை இந்திய கிரிக்கெட்டின் இளவரசன் பதித்துக் கொண்டு வருகிறான். விராட் கோலியின் கேப்டன்சி குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு கங்குலி, தோனி, டிராவிட் ஆகியோர் செய்த சாதனைகளை எளிதாக முறியடித்து வந்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதனை, நியூசிலாந்தில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது, ஆஸ்திரேலியாவில் செய்த சாதனை என சாதனைகளால் தான் விராட் பதிலளித்துக் கொண்டு வருகிறார்.

2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி தவறவிட்டது. அதேபோல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையைத் தொட்டுப் பார்த்துவிட்டு திரும்பி வந்தது. இவையனைத்தையும் ஒன்றாக இணைத்து மொத்தமாக வரும் உலகக்கோப்பையை கைப்பற்றி நிச்சயம் விராட் கோலி பதிலடிக் கொடுப்பார். விராட் கோலி ஆரம்பக் காலத்திலிருந்தே தனது கடினமான உழைப்பினால் உயர்ந்தவர். எல்லா வீரர்களும் விராட் கோலியின் ஷாட்களை எளிதாக ஆட முடியும். விராட் கோலிக்கு டி வில்லியர்ஸ், மார்கன், ஸ்டீவ் ஸ்மித் போன்று தனி ஸ்டைல்கள் கிடையாது.

kohli
கோலியின் கவர் டிரைவ்ஷாட்

ஆனால் விராட் கோலி ஆடும் ஷாட்களை வேறு எந்த வீரராலும் அவ்வளவு நேர்த்தியாக ஆட முடியாது. அதுதான் கோலியின் உழைப்பு. முதன்முதலாக இந்திய அணிக்குள் உடற்தகுதி இல்லாமல் விளையாட கூடாது என பிடிவாதமாய் இருந்தவர் விராட் கோலி.

முரட்டுக்காளை பாடலில் வரும் ஒரு வரிதான் விராட் கோலி குணம். பின்னாடி பாயுது மயிலக் காளை, முன்னால சீறுது மச்சக்காளை அடக்கி ஆளுது முரட்டுக் காளை. யார் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால் விராட் கோலி களமிறங்கினால், அங்கே கட்டுப்படுத்த முடியாத முரட்டுக் காளைதான் விராட் கோலி.

virat kohli
ஆக்ரோஷனமான செலப்பிரேஷனில் கோலி

எதிரணி வீரர்களை மதிப்பதாகட்டும், அதே வீரர்கள் நம்மை ஸ்லெட்ஜிங் செய்தால் திருப்பி கொடுக்க நேரம் வந்துவிட்டது என சண்டைக்கு தயாராவதாகட்டும், விராட் தான் நம்பர் ஒன்.

virat kohli
உலகக் கோப்பையை வெல்வாரா கோலி?

நாட் வெஸ்ட் தொடரில் இந்திய அணி வென்று லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி தனது ஜெர்சியை கழற்றி சுற்றியைதைப் போல், உலகக்கோப்பையை வென்று லண்டன் ஆக்ஸ்போர்டு தெருவில் சட்டையை சுழற்றிக்கொண்டு வலம் வரும் காட்சிக்காக இந்திய ரசிகர்கள் காத்திக்கொண்டு உள்ளனர். உலகக்கோப்பையை வென்றுவர வாழ்த்துகள் விராட் கோலி!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.