ETV Bharat / sports

ஆல்-ரவுண்டர்களுக்கு புதிய எல்லைகளை உருவாக்கும் ஷகிப்!

லண்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்றதோடு, அந்த அணியின் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் பல்வேறு சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார்.

லண்டன்
author img

By

Published : Jun 25, 2019, 1:53 PM IST

உலகக்கோப்பை தொடரின் விளையாடிவரும் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் ஆல் ரவுண்டர்களுக்கு என புதிய எல்லைகளை உருவாக்கிவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆல் - ரவுண்டர் என்றால் ப்ளிண்டாஃப், காலிஸ், யுவராஜ் சிங் என குறைந்த வீரர்களே நினைவுக்கு வருவார்கள். இதில் வங்கதேச வீரர்களில் ஆல் - ரவுண்டர்களை குறிப்பிடக் கேட்டால், ரசிகர்கள் யோசிப்பார்கள்.

ஜெர்சியில் புலிக்குட்டியை வைத்திருந்தாலும், பூனைக்குட்டி ஆட்டத்தைதான் வெளிப்படுத்துவார்கள் என வீரர்களின் காதுபட பேசிய ரசிகர்களே, இந்த உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி வீரர்கள் வெளிப்படுத்தும் ஆட்டத்தைப் பார்த்து திகைத்துப்போயுள்ளனர்.

அதிலும் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் அசந்துபோயுள்ளனர். ஆல்-ரவுண்டர் என்றால் எப்படி கிரிக்கெட் ஆட வேண்டும் என்பதை சொல்லும் விதமாக விளையாடிய 6 போட்டிகளில் 476 ரன்கள், 10 விக்கெட்டுகள் என மிரட்டிவருகிறார். தான் செயல்படுவதோடு, அணிக்கு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பணியை சிறப்பாக செய்து வருவதால், இவரது விக்கெட்டை வீழ்த்துவதில் எதிரணியினர் தீவிரம் காட்டிவருவது வங்கதேச ரசிகர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்திவருகிறது.

ஷகிப் அல் ஹசன்
ஷகிப் அல் ஹசன்

நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு 52 ரன்களும் எடுத்தார். இதனால், முதன்முறையாக ஆயிரம் ரன்களைக் கடந்த வங்கதேச வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

Intro:Body:

SHAKIB AL HASAN

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.