ETV Bharat / sports

எஞ்சியிருக்கும் நட்சத்திரங்களின் கடைசி உலகக்கோப்பை தொடர்? - CWC19

லண்டன்: 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரோடு 90’ஸ் கிட்ஸ்-ன், எஞ்சியிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரபோகிறது என சில வீரர்களுடைய பெயர்கள் ரசிகர்களிடையே முணுமுணுக்கப்படுகிறது. அதுகுறித்த சிறிய தொகுப்பு...

2019 World Cup
author img

By

Published : May 30, 2019, 2:24 PM IST

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் இன்று பிற்பகல் லண்டன் ஓவல் மைதனாத்தில் தொடங்கவுள்ளது. 48 போட்டிகள்... 10 அணிகள்... ஒரே குறிக்கோள்... உலகக்கோப்பை!

ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறவுள்ள இந்த உலகக்கோப்பைத் தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நகரங்கள் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளிலும் உலகக்கோப்பை ஃபீவர் தொடங்கிவிட்டது. ஐபிஎல் தொடரை பொழுதுபோக்காக பார்த்தவர்கள், உலகக்கோப்பை தொடரை உணர்ச்சிப் பெருக்கில் பார்க்கக் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் 90’ஸ் கிட்ஸ்-ன் ஆஸ்தான ஹீரோக்களின் கடைசி உலகக்கோப்பையாகவும் இந்தத் தொடர் பார்க்கப்படுகிறது. இவர்களில் பல்வேறு சாதனைகளைப் படைத்த வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை, முடிவுக்கு வரக் காத்திருக்கிறது. தங்களின் கடைசி போட்டி எதுவென்று தெரியாமல் விடைபெறக் காத்திருக்கிறார்கள்.

இன்சமாம் உல் ஹக், முரளிதரன், லாரா, மெக்ராத் என முக்கிய வீரர்கள் தங்களின் ஓய்வினை உலகக்கோப்பை தொடரோடு அறிவித்தார்கள். அதுபோல் பல எஞ்சியிருக்கும் நட்சத்திரங்களின் கடைசி உலகக்கோப்பை தொடர் இதுதான் எனப் பார்க்கப்படுகிறது. அவ்வாறு அனுமானிக்கப்படும் சில வீரர்கள்:

கிறிஸ் கெய்ல்:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 1999ஆம் ஆண்டு முதல் ஆடினாலும், நிர்வாகத்தின் பிரச்னையால் பல போட்டிகளில் பங்கேற்காமல் இருந்துள்ளார். இதுவரை 288 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள கிறிஸ் கெய்ல் 10,151 ரன்களை விளாசியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 492 ரன்கள் குவித்தார். அதில் 39 சிக்ஸர்கள் அடித்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. யுனிவர்ஸல் பாஸ் என்ற அடையாளத்துடன் வலம் வருபவர், சில நாட்களுக்கு முன்பு, 2019 உலகக்கோப்பை தொடரோடு தான் ஓய்வுபெறப் போவதாக அறிவித்தார். அப்போது பேசுகையில், இளம் வீரர்கள் எனக்காக இந்த உலகக்கோப்பையை வென்று கொடுங்கள் என கோரிக்கை விடுத்த இந்த அதிரடி மன்னன், அணியின் துணை கேப்டனாக முன்னால் நிற்கிறார்.

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

இம்ரான் தாஹிர்:

இந்திய ரசிகர்களால் பராசக்தி எக்ஸ்பிரஸ் என அன்பாக அழைக்கப்படும் இம்ரான் தாஹிர் இந்த உலகக்கோப்பை தொடரோடு ஓய்வை அறிவித்துள்ளார். இதுவரை தென்னாப்பிரிக்க அணிக்காக 98 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள தாஹிர், தனது சுழற்பந்துவீச்சால் எதிரணிகளை கலங்கடித்திருக்கிறார். உலகக்கோப்பைத் தொடர் என்றால் சோக்கர்ஸ் என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க அணி, இந்த வருடம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. உலகக்கோப்பையை வென்றுவிட்டால், லார்ட்ஸ் மைதானத்திலிருந்து நிச்சயம் தனது கைகளைத் தூக்கிக்கொண்டு பராசக்தி எக்ஸ்பிரஸ் சொந்த ஊருக்கு விரைவது நிச்சயம்.

இம்ரான் தாஹிர்
இம்ரான் தாஹிர்

சோயப் மாலிக்:

இந்தியாவின் மருமகனான சோயப் மாலிக், பாகிஸ்தான் அணியின் முன்னணி அனுபவ வீரர்களில் முக்கியமானவர். கிட்டதட்ட யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியவர், இன்றுவரை எதிரணியினருக்கு பல அதிர்ச்சி வைத்தியங்களைக் கொடுத்து வருகிறார். 37 வயதாகும் மாலிக், கிரிக்கெட்டிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தாலும் கபாலி ரஜினியைப் போல் கெத்தாக 'கம் பேக்' கொடுத்து பாகிஸ்தான் அணியில் விளையாடி வருகிறார். இந்த உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்வது இவரது கைகளில்தான் உள்ளது.

சோயப் மாலிக்
சோயப் மாலிக்

ராஸ் டெய்லர்:

நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம்தான் ராஸ் டெய்லர். இதுவரை 218 போட்டிகளில் விளையாடியுள்ள டெய்லர், நியூசிலாந்து அணிக்காக 8,000 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறார். நியூசிலாந்து அணிக்காக அதிக சதங்களை அடித்தவர். ஸ்டீபன் பிளம்மிங், டேனியல் விட்டோரிக்கு பின் நியூசிலாந்து ரசிகர்களின் நம்பிக்கையைப் பெற்றவர். இந்த உலகக்கோப்பைத் தொடரோடு ஒருநாள் போட்டிகளிலிருந்து விடைபெறக் காத்திருக்கிறார்.

ராஸ் டெய்லர்
ராஸ் டெய்லர்

தோனி:

இந்தியாவின் முடிசூடா மன்னன்... தல.. என பல பெயர்கள் இருக்கும் தோனிக்கு உலகம் எங்கும் ரசிகர்கள் படை உள்ளது. கேப்டனாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி... அணியை வழிநடத்துவது யார் என்பது அனைவருக்கும் தெரியும்! 2004ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வரும் தோனிக்கு இதுவே கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர். 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போதே, ஓய்வு குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளரை ஜாலியாக கலாய்த்து அனுப்பிய தோனி, இன்றும் நல்ல உடல்தகுதியுடன் உள்ளார். இம்முறையும் அதே கேள்வியை பத்திரிக்கையாளர்கள் எழுப்புவார்கள். ஆனால் பதில் என்னவாக இருக்கும் என்பது தோனிக்குதான் தெரியும். ஆனால் தோனிதான் இந்தியாவின் நம்பிக்கை! தல களத்தில் இருக்கும்வரை, எந்த அணிக்கும் இந்தியாவின் வெற்றி பறிபோகாது என்பது மட்டும் நிச்சயம்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.