ETV Bharat / sports

இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விலகல்! - இரண்டாவது டெஸ்ட் போட்டி’

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

Ishant likely to miss Christchurch Test with ankle injury

author img

By

Published : Feb 28, 2020, 7:28 PM IST

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், இஷாந்த் சர்மா தனது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் பங்கேற்கமாட்டார் என தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அல்லது நவ்தீப் சைனி அணியில் இடம்பெறுவர் என தெரிவித்தார்.

வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா
வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா

மேலும் அவர் கூறுகையில், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிபட்டு வந்த தொடக்க வீரர் ப்ரித்வி ஷா, காயத்திலிருந்து மீண்டுள்ளதாகவும், அடுத்த போட்டியில் களமிறங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது காயம் காரணமாக விலகியுள்ள இஷாந்த் சர்மா, நியூசிலாந்து அணியுடனான முதலாவது போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐபிஎல்லில் மீண்டும் கேப்டனாக அவதாரம் எடுக்கவுள்ள வார்னர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.