ETV Bharat / sports

WTC POINTS TABLE: முதல் இடத்தில் விராட் & கோ! - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 தொடர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 தொடரின் புள்ளிப்பட்டியலில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

WTC POINTS TABLE
WTC POINTS TABLE
author img

By

Published : Aug 25, 2021, 7:56 PM IST

துபாய்: இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் (2021-23 cycle) புள்ளிப்பட்டியலை சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் இன்று (ஆக. 25) வெளியிட்டுள்ளது.

புள்ளிகள் வழங்கும் முறை

ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு 12 புள்ளிகள் வழங்கப்படும். போட்டி சமனில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 6 புள்ளிகளும், டிராவில் முடிந்தால் தலா 4 புள்ளிகளும் வழங்கப்படும். இதன் அடிப்படையில் இத்தொடருக்குப் புள்ளிப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இரண்டு தொடர்கள்

தற்போது 2021-23 தொடரில், இங்கிலாந்து - இந்தியா அணிகளின் டெஸ்ட் தொடரும், மேற்கு இந்தியத் தீவுகள் - பாகிஸ்தான் அணிகளின் டெஸ்ட் தொடரும் நடைபெற்று வருகின்றன.

இந்த இரு தொடர்களிலும், தலா இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன.

இங்கிலாந்து தொடரில், முதல் போட்டி டிராவான நிலையில், இரண்டாவது போட்டியை இந்தியா வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் - மேற்கு இந்தியத் தீவுகள் தொடரில் 1-1 என்று நிலையில், இரு அணிகளும் சமநிலை பெற்றுள்ளன.

இந்தியா முதலிடம்

இதன்மூலம், இந்திய அணி 14 புள்ளிகளுடன் முதல் இடத்திலும்; பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் 12 புள்ளிகளுடன் முறையே இரண்டாம், மூன்றாம் இடத்திலும்; இங்கிலாந்து 2 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

இங்கிலாந்து - இந்தியத் தொடரின் முதல் போட்டியில், இரு அணிகளும் தலா இரண்டு ஓவர்களை குறைவாக வீசிய காரணத்தால், இரண்டு புள்ளிகளை குறைப்பதாக ஐசிசி அறிவித்திருந்தது.

மேலும், முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை (2019-21) நியூசிலாந்து அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ENG vs IND: ஆண்டர்சனால் ஆட்டம் கண்டது டாப்-ஆர்டர்; கோலி மீண்டும் ஏமாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.