ETV Bharat / sports

தோனியை குறிவைக்கும் ஐசிசி - ரசிகர்கள் காட்டம் - பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி, ராணுவ அடையாளத்தை அவரது கையுறையில் இருந்து நீக்கக் கோரி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி வலியுறுத்தியுள்ளது.

dhoni
author img

By

Published : Jun 7, 2019, 11:56 AM IST

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்து, வேல்ஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் ஜூன் 5ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. இப்போட்டியின்போது, இந்திய விக்கெட் கீப்பரான எம்.எஸ். தோனி, விக்கெட் கீப்பிங்கிற்காக பயன்படுத்திய கையுறையில் இந்திய துணை ராணுவப்படையின் அடையாளம் இடம்பெற்றிருந்தது. இதைக்கண்ட தோனியின் ரசிகர்கள், ராணுவத்தினர் மீது வைத்துள்ள மரியாதை, அன்பு குறித்து புகழ்ந்து தள்ளி அப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கினர்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, கிரிக்கெட் போட்டிகளின்போது வீரர்கள் அணியும் உடை, கையுறை உள்ளிட்டவற்றில் அரசியல், சமூகம் சார்ந்த சொந்த விருப்பத்தை வெளிப்படுத்தும் கருத்துகளுக்கு அனுமதி இல்லை என்பதால் தோனியின் கையுறையில் இடம்பெற்றிருக்கும் ராணுவ அடையாளத்தை நீக்க வலியுறுத்தி இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயிடம் பரிந்துரை செய்துள்ளது.

dhoni
ரசிகரின் ட்விட்

ஐசிசி இதுபோன்று கூறியதற்கு தோனியின் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். தோனி 2011ஆம் ஆண்டு இந்திய துணை ராணுவத்தில் லெப்டினன்ட் தரவரிசை பெற்றதோடு, சில நாட்கள் ராணுவ பயிற்சியிலும் கலந்துகொண்டார்.

முன்னதாக இந்தாண்டு பிப்ரவரி மாதம் புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்திய அணி வீரர்கள் அனைவரும் ராணுவ தொப்பியை அணிந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.