உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் கடந்த மே 30ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இங்கிலாந்து அணி ஆடிய நான்கு போட்டிகளில் மூன்றில் அபார வெற்றி பெற்றுள்ளது. இறுதியாக நடந்த லீக் போட்டியில் அபார ஆட்டததை வெளிப்படுத்திய இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வென்றது. ஆயினும்அந்தப் போட்டியில் அணியின் நட்சத்திர வீரர் ஜேசன் ராய் காயமடைந்தது இங்கிலாந்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தான் ஆடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் அந்த அணி உள்ளது.
தனது இரண்டாவது உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பம் முதலே ஏமாற்றமே மிஞ்சியது. ஆப்கானிஸ்தான் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. டி20 தொடர்களில் அட்டகாசமாக செயல்படும் அந்நாட்டின் நட்சத்திர வீரர்கள் உலகக் கோப்பைத் தொடரில் சோபிக்காமல் போனது அந்த அணியின் தோல்விக்கு காரணமாக உள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி மான்செஸ்டரிலுள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று எதிர்கொள்கிறது. இவ்விருஅணிகள் உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை ஒரு முறை மட்டுமே நேருக்கு நேராக சந்தித்துள்ளன. 2015இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டக்வொர்த் லூவிஸ் முறையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.