டெல்லி: 45 போட்டிகள் கொண்ட டி20 உலகக் கோப்பை தொடரில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில், பாப்புவா நியூ கினி, நெதர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, நாமிபியா உள்ளிட்ட அணிகளும் பங்கேற்கவுள்ளன.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், தரம்சாலா, லக்னோ, ஹைதராபாத், பெங்களூர், சென்னை ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில், பாகிஸ்தான் விளையாட இருக்கும் 2 போட்டிகளை டெல்லியில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் அரையிறுதி போட்டிகள் மும்பை, கொல்கத்தாவிலும், இறுதிப்போட்டி அகமதாபாத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தரம்சாலா மைதானத்தில் நாக்அவுட் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் போட்டி அட்டவணை வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அந்நாட்டு ஊடகங்களுக்கான விசா கிடைப்பதில் எந்த வித சிக்கலும் இருக்காது என்று பிசிசிஐ உயர் மட்ட குழு உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: பெல்லி ஜீன் கிங் கோப்பை - ஒற்றையர் பிரிவில் இரு போட்டிகளிலும் இந்தியா தோல்வி