ETV Bharat / sports

CWC19: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தப்புமா தென்னாப்பிரிக்கா? - Amla

சவுதம்டன்: இன்று நடைபெறும் உலகக்கோப்பைத் தொடரின் 15ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுகிறது.

தென்னாப்பிரிக்கா
author img

By

Published : Jun 10, 2019, 10:12 AM IST

உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுகிறது. தென்னாப்பிரிக்கா அணியைப் பொறுத்தவரையில், விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளதால் இன்று விளையாடும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் மேலும் தோல்வியடைந்தால் தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.

இம்ரான் தாஹிர்
இம்ரான் தாஹிர்

ஆம்லா, டி காக், டூ ப்ளஸிஸ், வாண்டர் டூசன், மார்க்ரம், மில்லர், டுமினி என சிறந்த பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தாலும் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது. அதேபோல் ரபாடா, இம்ரான் தாஹிர் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றியத் தேடித் தர வேண்டும்.

இம்ரான் தாஹிர்
ஆம்லா

மறுமுனையில் வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நடுவர்களின் தவறான முடிவுகளால் சிக்கி சின்னாபின்னாகியதையடுத்து, இந்தப் போட்டியில் வென்று வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது.

அதேபோல் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அதிரடியாக ஆடும் நிலையில், கட்டமைத்து கிளாசிக் இன்னிங்ஸ் ஆடுவதற்கு பெயர்போன டேரன் பிராவோ அணியில் சேர்க்காதது பின்னடைவை ஏற்படுத்துகிறது.

கெய்ல்
ஆஸி.யிடம் ஃப்ரீ - ஹிட் பந்தில் ஆட்டமிழந்த கெய்ல்

தென்னாப்பிரிக்காவின் சுழல்நாயகன் தாஹிர், இன்று இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்க வாய்ப்புள்ளதால், தாஹிர் பந்தை வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஆஷ்லி நர்ஸ், ஹோல்டர், ஒஷானே தாமஸ், காட்ரெல் ஆகியோர் தென்னாப்பிரிக்காவின் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தவில்லை என்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகப்பெரிய இலக்கை விரட்டும் நிலைக்கு தள்ளப்படும்.

வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ்

தென்னாப்பிரிக்கா அணிக்கு வாழ்வா? சாவா? போட்டி என்பதாலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தாக்குதல் ஆட்டத்தாலும் இப்போட்டிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.