ETV Bharat / sports

தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இன்று பலப்பரீட்சை

author img

By

Published : Jun 2, 2019, 9:29 AM IST

லண்டன்: இன்றைய உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து வங்கதேசம் அணி விளையாடுகிறது.

லண்டன்

இன்று நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரின் ஐந்தாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து தொடர்ந்து ஆக்ரோரோஷமாக பாம்பு டான்ஸ் ஆடி விளையாடும் வங்கதேசம் அணி களமாடுகிறது.

தென்னாப்பிரிக்கா அணியைப் பொறுத்தவரையில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்தத் தொடரில் தனது முதல் வெற்றியை விரைவாக பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு விளையாடுகிறது. பேட்டிங்கில் ஆம்லா கடந்த போட்டியில் காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக மில்லர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் டி காக், மார்க்ரம், டூ ப்ளஸிஸ், டுமினி என பலமான பேட்டிங் வரிசை கொண்டிருந்தாலும் போராட்ட குணத்தை வெளிப்படுத்தாமல் ஆடிவருவது தென்னாப்பிரிக்க ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஸ்டெயின் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரபாடா, இங்கிடி, தாஹிர் ஆகியோருடன் ஸ்டெயின் இணைவது தென்னாப்பிரிக்கா அணியின் பலத்தை அதிகரிக்கும்.

தாஹிர்
தாஹிர்

வங்கதேச அணியைப் பொறுத்தவரையில், தமீம் இக்பால், ரஹீம், சர்கார், மஹ்மதுல்லா, சபீர் ரஹ்மான், சாகிப் அல் ஹசன் என வலிமையான பேட்டிங் வரிசைக் கொண்டிருந்தாலும் நடு வரிசையில் ரஹீமை மட்டுமே வங்கதேச அணி நம்பி உள்ளது. பந்துவீச்சில் முஸ்டாஃபீசூர் ரஹ்மான், மோர்டசா, மெஹிதி ஹசன் என மிகப்பெரிய பேட்டிங் வரிசைக்கும் ஈடுகொடுக்கும் அளவிற்கு உள்ளது.

வங்கதேச அணி
வங்கதேச அணி

ஆனால் தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரையில் அன்றைய நாளை சிறப்பாக தொடங்கிவிட்டால் எதிரணியின் கடைசி சொட்டு ரத்தம் வரைக்கும் வேட்டையாடிச் செல்வர். தென்னாப்பிரிக்கா அணியிடம் பெறும் தோல்வி எந்த ஒரு அணிக்கும் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்திச் செல்லும்.

மோர்டசா
மோர்டசா

2007ஆம் ஆண்டு முதல் வங்கதேச அணி உலகக்கோப்பை தொடர்களில் பெரிய அணிகளை அப்செட் செய்து தற்போது மிகப்பெரிய அணியாக வலம்வருகிறது. குழுவாக ஆடுவதில் வங்கதேச வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். இரு அணிகளில் யார் முதல் வெற்றியைப் பதிவு செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.