ETV Bharat / sports

CWC19: வங்கதேசத்தை போராடி வீழ்த்திய நியூசிலாந்து! - shakib al hasan

லண்டன்: உலகக்கோப்பைத் தொடரின் ஒன்பதாவது ஆட்டத்தில் வங்கதேச அணியை இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி போராடி வீழ்த்தியது.

உலகக்கோப்பை
author img

By

Published : Jun 6, 2019, 8:11 AM IST

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்திய போட்டியை மட்டுமே அனைவரும் கவனிக்க, சத்தமில்லாமல் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதியப் போட்டி மிகச்சிறப்பாக அமைந்தது.

லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்ய, வங்கதேச அணியோ தென்னாப்பிரிக்காவை அடித்த தெம்புடன் நியூசிலாந்தை புரட்டி எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு களமிறங்கியது.

சாகிப்
சாகிப்

தொடக்க வீரர்களாக தமீம் இக்பால் - சர்கார் இணை முதல் விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தபோது, சர்கார் 25 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற... இதோ நானும் வந்துவிட்டேன் என மற்றொரு தொடக்க வீரரான தமீம் 24 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஆல் - ரவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் சாகிப் அல் ஹசன் - ரஹீம் இணை சிறிது நேரம் போராட, ரஹீம் துரதிஷ்டவசமாக 19 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, சாகிப் தனது பங்கிற்கு அதிரடியாக 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக வங்கதேச அணி 49.2 ஓவர்களில் 244 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

சாண்ட்னர்
ராஸ் டெய்லர் - ரஹீம்

இதனையடுத்து, வங்கதேச அணிதானே என களமிறங்கிய நியூசி.க்கு வங்கதேச பந்துவீச்சாளர்கள் தங்களின் சிறப்பான பந்துவீச்சால் அதிர்ச்சி கொடுத்தனர். கப்தில் 25, மன்ரோ 24 ஆகிய ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த நியூசி.யின் காப்பான்களான வில்லியம்சன் - ராஸ் டெய்லர் இணை வங்கதேச அணியின் பவுலர்களை எளிதாக சமாளித்தது.

சாகிப்
ஃபெர்குசன் - சாண்ட்னர்

மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த இணை 105 ரன்கள் சேர்க்க, வில்லியம்சன் 40 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த லதாம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, ஆட்டம் பரபரப்பானது. தொடர்ந்து வந்த நீஷம் 25 ரன்களிலும், டெய்லர் 82 ரன்களிலும், கிராண்ட்ஹோம் 15 ரன்களிலும், ஹென்றி 6 ரன்களிலும் வெளியேற ஒரு கட்டத்தில் வங்கதேச அணி வெற்றிபெறும் நிலைக்கு சென்றது.

சாண்ட்னர்
சாண்ட்னர்

பின்னர் ஆடிய சாண்ட்னர் - ஃபெர்குசன் இணை நியூசிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இறுதியாக நியூசி. அணி 47.1 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. முஸ்தாஃபிகுர் ரஹ்மான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக ராஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.