ETV Bharat / sports

CWC19: இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளிக்குமா வங்கதேசம்? - root

கார்டிஃப்: இன்றைய உலகக்கோப்பை தொடரின் 12ஆவது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடவுள்ளது.

வங்கதேசம்
author img

By

Published : Jun 8, 2019, 11:48 AM IST

2019ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து வங்கதேசம் ஆடவுள்ளது.

2011, 2015 ஆகிய இரு உலகக் கோப்பை தொடரிலும் இங்கிலாந்து அணியை வங்கதேச அணி வென்றுள்ள நிலையில், இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி பெற்ற தோல்விக்கு தன் சொந்த மண்ணில் பதிலடி கொடுக்குமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வங்கதேச அணி
வங்கதேச அணி

வங்கதேச அணியைப் பொறுத்தவரையில் தமீம் இக்பால், சர்கார், சாகிப் அல் ஹசன், ரஹீம், மஹமதுல்லா என சிறந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளதால் சிறந்த அணிகளையும் அச்சுறுத்தி வருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது, இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்த கிடைத்த அற்புதமான வாய்ப்பை நூலிளையில் கோட்டைவிட்டது.

சாகிப் அல் ஹசன்
சாகிப் அல் ஹசன்

பந்துவீச்சில் மோர்டசா, சைஃபூதீன், முஸ்தாஃபிகுர் ரஹ்மான், மெஹதி ஹசன் ஆகியோர் சிறப்பாக செய்லபட்டால் இங்கிலாந்து அணியை மீண்டும் ஒருமுறை வங்கதேச அணி வீழ்த்தலாம்.

வங்கதேச அணி
வங்கதேச அணி

அதேபோல் இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. இதனால் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு மீதும், ஃபீல்டிங்கின் மீதும் கேள்வி எழுந்துள்ளது. பேட்டிங்கைப் பொறுத்தவரை மோர்கன், பெயர்ஸ்டோவ், ராய், பென் ஸ்டோக்ஸ், ரூட், மொயின் அலி, பட்லர், கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர் என பட்டாளமே இருந்தாலும் மோர்கன், பட்லர், ரூட் மட்டுமே சிறப்பாக செயல்படுகின்றனர். தொடக்க வீரர் பெயர்ஸ்டோவ் இன்றைய போட்டியில் சிறப்பாக ஆட முயற்சிக்க வேண்டும்.

ரூட்
ரூட்

பந்துவீச்சில் வோக்ஸ், ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட் ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை என்றால் வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து அணியை வீழ்த்துவது நிச்சயம்.

ஆர்ச்சர்
ஆர்ச்சர்

இன்றைய போட்டியில் வங்கதேச அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாறு படைக்குமா அல்லது வங்கதேச அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தி தோல்விகளுக்கு பதிலடி கொடுக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.