ETV Bharat / sports

கிரிக்கெட்டர் ஸ்மிருதி மந்தனா! - SMiriti Mandhana

இத்தனை வருடங்களாக யாரும் ஒரு மகளிர் கிரிக்கெட் வீராங்கனையின் பெயரை பொறித்துக் கொடுக்குமாறு கேட்டதில்லை எனக் கூறி மிகவும் பெருமையோடு மந்தனா என்ற பெயரை ஜெர்சியில் பொறித்துக் கொடுக்கிறார். அந்த நிமிடம் முதல் மந்தனா என்னும் பெயர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்கமுடியாத பெயராக மாறியது.

ஸ்மிருதி
author img

By

Published : Jul 19, 2019, 8:10 PM IST

2017ஆம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. பலம் வாய்ந்த அணிகளாக வலம் வந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளையும் எளிதாக வென்றுவிடும் அளவிற்கு இந்திய மகளிர் அணி அட்டகாசப்படுத்தியது. அந்தத் தொடரை யாரும் எதிர்பாராத விதமாக உலகமே உற்று நோக்குகிறது.

அந்த தொடர் நடைபெற்று வருகையில், லண்டனில் அமைந்துள்ள ஒரு ஜெர்சி ஷோரூமிற்குள் 10 சிறுமி நுழைகிறார். ‘இந்திய ஜெர்சி ஒன்றை கையில் எடுத்து, கடைக்காரரிடம் நேராக சென்று இந்த ஜெர்சியில் மந்தனா என்னும் பெயர் பொறிக்க வேண்டும்' என கேட்கிறார். ஒரு நிமிடம் அந்த ஷோரூமில் இருந்தவர்கள் அனைவரும் அதிசயித்து போகிறார்கள். இத்தனை வருடங்களாக யாரும் ஒரு மகளிர் கிரிக்கெட் வீராங்கனையின் பெயரை பொறித்துக் கொடுக்குமாறு கேட்டதில்லை எனக் கூறி மிகவும் பெருமையோடு மந்தனா என்ற பெயரை ஜெர்சியில் பொறித்துக் கொடுக்கிறார். அந்த நிமிடம் முதல் மந்தனா என்னும் பெயர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்கமுடியாத பெயராக மாறியது.

ஸ்மிருதி
சதம் விளாசிய ஸ்மிருதி

'powerful persons come from powerful places' என்ற வசனத்திற்கு ஏற்ப மும்பையை சேர்ந்தவர் மந்தனா. சிறு வயதில் தனது அண்ணனும் தந்தையும் கிரிக்கெட் ஆடுவதைப் பார்த்து கிரிக்கெட் பிடித்துப்போன மந்தனா, தானும் கிரிக்கெட் ஆட வேண்டும் என பேட்டை தூக்கினார். இயற்கையாக வலதுகை பழக்கமுள்ள மந்தனாவை, அவரது தந்தை இடதுகை பேட்டிங் ஆடினால் ஸ்டைலாக இருக்கும் என்பதால் இடதுகை பேட்டிங்குக்கு மாற்றினார்.

9 வயதில் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய மந்தனா, 11 வயதில் 15 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட அணியிலும், 16 வயதில் தேசிய அணியிலும் இடம்பிடித்தார். கிரிக்கெட் ஆடத் தொடங்கியது முதல் இன்று வரை அவருடைய அண்ணன்தான் ஸ்மிருதிக்கு பந்துவீசி வருகிறார். ஆம், நமது நாட்டில் பெண்கள் கிரிக்கெட் பயிற்சி பெற வேண்டும் என்றால், ஆண்களுடன்தான் விளையாட வேண்டும் என்ற கட்டாயம் இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ஸ்மிருதி
ஸ்மிருதி

இவர் குஜராத் அணிக்கு எதிராக அடித்த இரட்டை சதம் தேசிய அளவிலான தேர்வாளர்களை ஈர்த்தது. அந்த இரட்டை சதத்திற்கு பின்னால் ஒரு ரகசியம் உள்ளது. அந்த ஆட்டம் ஆடியது இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பரிசளித்த பேட்டினை பயன்படுத்திதான். கிட்டத்தட்ட 25 பவுண்டரிகளை அடித்து எதிரணியை துவம்சம் செய்தார். அதன் விளைவு, இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கிறது. முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக 25 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் சதம் விளாசியதால் இந்திய அணி எளிதாக வெற்றிபெறுகிறது. அங்கே தொடங்கிய ஆட்டம், மின்னல் வேகத்தில் வானில் பறக்கத் தொடங்குகிறது.

ஸ்மிருதி
ஸ்மிருதி

ப்ரெண்ட் ஃபூட் எடுத்து வைத்து இவர் அடிக்கத் தொடங்கினால், எதிரணியினருக்கு கிலி ஏற்படும். இவரது கவர் ட்ரைவ் ஷாட்களுக்காகவே மகளிர் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கினார்கள். கவர் ட்ரைவ் மட்டுமல்ல, ஸ்ட்ரைட் ட்ரைவ், புல் ஷாட், கட் ஷாட் என அனைத்து வகையான ஷாட்களையும் நேரத்தியாக ஆடும் திறமையை வளர்த்துக்கொண்டார் ஸ்மிருதி.

ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனா

ஒரு கட்டத்தில் அரைசதம் மட்டுமே அடித்துவிட்டு ஆட்டமிழக்கிறார் என பேசியபோது, இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு பயணப்படுகிறது. முதல் சதத்தை அடிக்கிறார். முதல் சதமே ஆஸ்திரேலிய மண்ணில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பயணப்பட்ட நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழலில் சதங்களாக விளாசி தவிர்க்க முடியாத வீராங்கனையாக வலம் வருகிறார். அதிலும், தென்னாப்பிரிக்க மண்ணில் அடித்த சதத்திற்கு பிறகு, அடுத்ததாக ஆடிய 8 ஒருநாள் போட்டிகளில் 6 அரைசதங்கள். சர்வதேச கிரிக்கெட் மிரண்டு போகிறது. போதாக்குறைக்கு மகளிர் கிரிக்கெட்டின் அரசிகளான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஸ்மிருதிக்கு பந்துவீச பயந்ததெல்லாம் ஸ்மிருதியின் தரமான சம்பவங்கள்.

ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனா

ஒருகட்டத்தில் ஸ்மிருதி களமிறங்கினால் முதல் பந்திலிருந்தே சிக்ஸர், பவுண்டரிகள்தான் பறக்கும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த ஒரு இன்னிங்ஸை யாராலும் மறக்க முடியாது. நாக்பூரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம், தொடக்கம் முதலே அதிரடியில் கலக்கும் ஸ்மிருதி, அந்தப் போட்டியில் எதிர் நிற்கும் வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் தனது டிஃபன்ஸிவ் ஆட்டத்திற்கு மாறுகிறார். ஃப்ரெண்ட் ஃபூட்டில் சிக்ஸர் அடிக்கும் வீராங்கனை, பேக் ஃபூட்டில் சிங்கிள்களை அடிக்கிறார். கடைசி வரை போராடிய ஸ்மிருதி 86 ரன்கள் சேர்த்ததால், இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறுகிறது.

ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனா

அதனையடுத்து காயம் காரணமாக உலகக்கோப்பைக்கு முன்னதாக சில தொடர்களில் ஆட முடியவில்லை. நேரடியாக உலகக்கோப்பையில் பங்கேற்கிறார். காயத்திலிருந்து மீண்டதால், மிகப்பெரிய இன்னிங்ஸ்களை எதிர்பார்க்க கூடாது என பேசியவர்கள் முன்னிலையில் அடித்து நொறுக்குகிறார். அதிலும் 2018ஆம் ஆண்டு மட்டும் 1,291 ரன்கள். அதை தொடர்ந்து இங்கிலாந்தின் கேஎஸ்எல் தொடரில் 421 ரன்கள்.

ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதியும், ரோட்ரிக்ஸும் சேர்ந்து தொடக்க வீராங்கனையாக களமிறங்கினால், எதிரணியினர் 200 சதவீத உழைப்பை போட வேண்டும். இல்லையென்றால் நிச்சயம் ஆட்டத்தில் இந்திய அணிதான் வெற்றி என்பதை எழுதி வைக்கலாம் என்ற நிலைக்கு இந்திய கிரிக்கெட் அணி வளர்ந்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீராங்கனைகள் கோலோச்சிய மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா சார்பாக நீண்ட காலமாக மிதாலி மட்டும் போராடி வந்தார். தற்போது அந்த போராடத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஸ்மிருதி தன் தோளில் எடுத்துக்கொண்டு இந்திய மகளிர் கிரிக்கெட்டை வேகமாக முன்னேற்றி வருகிறார்.

ஸ்மிருதி
ஸ்மிருதி

சில நாட்களுக்கு முன்னாள் ஒரு பேட்டியில் ஸ்மிருதி கூறிய கருத்து, என்னை பொறுத்தவரை நான் ஒரு கிரிக்கெட்டர் மட்டுமே. மகளிர் கிரிக்கெட்டர் என்னும் அடையாளம் யாருக்கும் தேவைப்படவில்லை. ஆம்.. ஆண்களை கிரிகெக்ட்டர்கள் எனக் கொண்டாடும் நாம் மகளிரையும் கிரிக்கெட்டர்களாக அடையாளப்படுத்த வேண்டும் எனக் கூறியது இந்திய மகளிர் கிரிக்கெட் வளர்ந்துவிட்டது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டது.

ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனா

நேற்று ஸ்மிருதி மந்தனாவுக்கு பிறந்தநாள். எப்போதும் ஆடவர் கிரிக்கெட்டர்களுக்கு கட்டுரைகளை எழுதும் ஊடகங்களும் மக்களும் முதன்முதலாக மந்தனாவை கொண்டாடினார்கள். HBDManadhana என்னும் ஹேஷ்டாக் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கு உயிர் கொடுத்தது மிதாலி என்றால், முகம் கொடுத்தது மந்தனாதான். வாழ்த்துகள் மந்தனா..விரைவில் உலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வாருங்கள்..!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.