ETV Bharat / sports

கெத்தா நடந்து வரான்... காலரத்தான் தூக்கி வரான்... பும்ராவின் கதை

கிரிக்கெட் ஆடும் சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கு பந்துவீச்சில் ஒரு ஸ்டைல் இருக்க வேண்டும் என்பதற்காக பிரெட் லீ, ஜாகீர் கான், இர்ஃபான் பதான் ஆகியோரின் ஸ்டைலயே பயன்படுத்துவர். ஆனால் தற்போது ஒரு இளம் வீரரின் ஸ்டைலை சிறுவர்கள் கற்றுக்கொண்டு இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த ஸ்டைலுக்கு சொந்தக்காரரான் பும்ராவைப் பற்றிய சிறுதொகுப்பு...

பும்ரா
author img

By

Published : May 27, 2019, 10:25 AM IST

Updated : May 27, 2019, 4:16 PM IST

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை பந்துவீச்சாளர்கள் கேட்ச், லெக் பை விக்கெட், ரன் அவுட் என எப்படி விக்கெட்டுகள் எடுத்தாலும் ஸ்டம்புகள் சிதற போல்டாகி வெளியேறுவதைப் பார்ப்பதுதான் ரசிகர்களுக்கு அலாதி ப்ரியம். அதேபோலான இன்பம்தான் யார்க்கர் பந்துகளால் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும்போதும் ஏற்படும். இந்த ஆண்டு தொடங்கவுள்ள உலகக்கோப்பை தொடர் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி பட்டம் வெல்வதற்கு ஒரு வேகப்பந்துவீச்சாளர்தான் துருப்புச் சீட்டு.

பும்ரா
பும்ரா

இந்த இளைஞன் பந்துவீச வந்தால் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மன்களும் பதட்டமாவார்கள். எதிரில் உள்ள பேட்ஸ்மேனோடு ஒவ்வொரு பந்துக்கும் விவாதம் செய்வார்கள். எதிரணியின் ரசிகர்கள் மனதில் பயம் ஏற்படும். ஏன் இவரது பந்துவீச்சில் விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஸ்டீவ் ஸ்மித் உட்பட அனைவரும் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். இவரின் பந்துவீச்சில் முதல் நான்கு அடிகள் நடந்து வருவார்... அடுத்த நான்கு அடிகளில் சிறிதாக எம்பி வருவார்... கடைசி நான்கு அடிகளின்போது முழுமையான பலத்தைக் கொண்டு தனக்கே உரிய ஸ்டைலான பந்துவீச்சில் கையிலிருந்து வெளியேறும் பந்து, கண் இமைக்கும் நேரத்தில் பேட்ஸ்மேன்களைத் தாண்டிச் சென்றுவிடும். ஆம் அந்த இளைஞன் தான் பூம்... பூம்... பும்ரா!

பும்ரா
பும்ரா

முதன்முதலாக இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சு என்றால் எவ்வாறு வீச வேண்டும் என செய்து காட்டியவர் கிரேட் கபில் தேவ். அவருக்கு பின் வெங்கடேஷ் பிரசாத், ஸ்ரீநாத் என்று சிலர் வந்தாலும் ஜாகீர் கான்தான் சர்வதேச பேட்ஸ்மேன்களை அற்புதமான வேகப்பந்துகளால் திணறடித்தார். அவருக்குப் பின் வந்தவர்களில் சிலர் சிறப்பாக வீசினாலும் தொடர்ந்து சிறப்பாக செயல்படவில்லை. பின்னர்தான் பும்ரா அறிமுகமாகிறார். 2016ஆம் ஆண்டு, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணப்படுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் இந்திய அணிக்கு தோல்வி. தொடர்தான் தோற்றுவிட்டோம். மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று நினைக்கையில் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக விலகுகிறார். ஐந்தாவது போட்டியில்தான் பும்ரா என்னும் சிங்கம் களமிறங்குகிறது.

பும்ரா
பும்ரா

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள். அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் சிதறடித்தாலும் பும்ராவின் பந்துகளை எதிர்கொள்ள திணறினர். 10 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். போட்டியில் இந்திய அணி வெற்றி. போட்டிக்கு பின்னர் அப்போதைய கேப்டன் தோனி செய்தியாளர் சந்திப்பில் பேசியது கிரிக்கெட் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. அவர் பேசிய வார்த்தைகள் இவை... 'இந்தத் தொடரின் சிறந்த தேடல் பும்ராதான். அவர் சிறந்த யார்க்கர் பந்துகளை வேகமாக வீசுகிறார். குறைந்த ஓவர் போட்டிகளுக்கு யார்க்கர் பந்துகளை சிறப்பாக வீச வேண்டும்' என்றார். எந்த வீரரையும் முதல் போட்டியிலேயே அதுவரை தோனி புகழ்ந்தது கிடையாது. அப்போதே பும்ரா உலக கிரிக்கெட்டை ஆளப் போகிறார் என தெரிந்துவிட்டது.

ஒரு கதை சொல்லட்டா சார்...

அகமதபாத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது சிறுவயதிலேயே தன் அப்பாவை இழக்கிறான். பின்னர் அம்மாவும், சகோதரியும்தான். அந்த அம்மாவால் குழந்தைகளுக்கு படிப்பை மட்டும்தான் கொடுக்க முடிகிறது. அந்தச் சிறுவனுக்கு கிரிக்கெட்டின் மேல் காதல். ஒரு கட்டத்திற்கு மேல் எனக்கு படிப்பையும் தாண்டி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப் போகிறேன் எனக் கூறுகிறார். அதற்கு அவரது அம்மா சிறு தயக்கத்துடன் அனுமதிக்கிறார்.

16 வயதின்போது தனது சைக்கிளில் 30 நிமிடங்கள் பயணம் செய்து தினமும் பயிற்சி மேற்கொள்கிறான் அவன். பிறகு சைக்கிள் உடைகிறது. பயணம் செய்வதற்கு கையிலும், பையிலும் காசு கிடையாது. அதனால் தினமும் பயிற்சி செய்வதற்காக நடந்தே செல்கிறான். கிரிக்கெட் விளையாடுவதற்கு அம்மாவிடம் நைக் (nike) ஷூ கேட்கிறான். வாங்குவதற்கு பணம் இல்லை. அதனால் 'நானே சம்பாதித்து பந்தை வாங்கிக் கொள்கிறேன்' என உறுதியேற்கிறார் அந்தச் சிறுவன்! வாழ்வின் கொடிய மிருகம் வறுமைதானே? அதை வெல்வதற்காகத்தானே இங்கே பெரும்பாலானோர் போராடுகிறோம்

பும்ரா
குடும்பத்தினருடன் பும்ரா

பின்னர் 'உங்கள் கையில் பந்து இருந்தால் என்ன பண்ணுவீர்கள்?' என பயிற்சியாளர் எல்லோரிடமும் கேட்கிறார். அதற்கு அந்தச் சிறுவன், யாரும் வீச முடியாத அளவிற்கு வேகமாக வீசுவேன் என்கிறான். தொடர்ந்து பயிற்சியால் சிறப்பாக செயல்படுகிறான். தொடர்ந்து 19 வயதுக்குட்படோருக்கான குஜராத் கிளப் உடன் இணைந்த கிளப்பிற்காக ஆடுகிறான். அதற்குப் பிறகு நடைபெற்ற சூரத் அணிக்கு எதிரான போட்டியில் அவரின் அதிரடியான யார்க்கர்களுக்கும், பவுன்சர்களுக்கும், வேகத்திற்கும் ஈடுகொடுக்க முடியாத பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்து வெளியேறுகின்றனர். போட்டியின் முடிவில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார். இதனையடுத்து 23 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் கிடைக்கிறது. ஆனால் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.

பின்னர் பயிற்சியின்போது அந்தச் சிறுவன் வீசிய யார்க்கர், ஆடும் லெவனில் உள்ள வீரரின் கால்களை பதம் பார்க்கிறது. காலில் காயம் ஏற்பட்டதால் ஆட்டத்திற்கு முதல் நாளே அந்த வீரர் விலகுகிறார். அவருக்கு பதிலாக அந்தச் சிறுவன் களமிறங்குகிறார்! வாய்ப்பை உருவாக்குவது இதுதானோ...?

பும்ரா
பும்ரா

பின்னர் குஜராத் அணிக்காக முதல்தர போட்டியில் பங்கேற்கிறார் அந்த இளைஞன்... ஆம் அவர் அப்போது 19 வயது இளைஞன். அந்த இளைஞனின் யார்க்கர்களை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர். அதனைப் பார்த்த இந்திய முன்னாள் வீரர் நெஹ்ரா, ஓடிச் சென்று பார்திவ் படேலிடம் 'இவன் நிச்சயம் இந்தியாவுக்காக ஆடுவான்' என்கிறார். ஆனால் பார்திவ் அதனை சட்டை செய்யவில்லை.

அதன்பிறகு அந்த இளைஞன் பயிற்சியில் செய்வதை ஒரு பிரபலமான பயிற்சியாளர் பார்க்கிறார். தொடர்ந்து துல்லியமான யார்க்கர் வீசும் அவரது திறமைகளைப் பார்த்து வாவ் என வியக்கிறார். தொடர்ந்து அங்கிருந்து பார்த்திவ் படேலுக்கு ஃபோன் போகிறது. அடுத்த இரண்டு நாட்களில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவருடன் ஒப்பந்தம் செய்கிறது.

பும்ரா
பும்ரா

பந்துவீசிய அந்த இளைஞன்தான் தற்போது சர்வதேச பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் பும்ரா...! அந்தப் பயிற்சியாளர் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட்.

2013ஆம் ஆண்டு மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, இந்திய கிரிக்கெட்டின் லெஜண்டு சச்சின், இவரது பந்துவீச்சைப் பார்த்து வியக்கிறார். தனது 24 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 300க்கும் மேற்பட்ட பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட சச்சின் டெண்டுல்கர் பும்ராவின் திறமையைப் பார்த்து வியந்து பேசுகிறார்.

பும்ரா
சச்சின் - பும்ரா

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் தவறு:

அதன்பிறகு அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணிக்குள் இடம் கிடைக்கிறது. தோனி கேப்டன்சியில் இருந்து விலகியதையடுத்து கோலியிடம் கேப்டன்சி கொடுக்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி தொடர். இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெறும் என எதிர்பார்க்கையில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி வாகை சூடுகிறது. அப்போட்டியில் பும்ரா வீசிய ஒரு நோ-பால் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைகிறது. இதற்காக இந்தியா முழுவதும் பும்ரா என்றால் நோ-பால் என்று பேசப்படுகிறது. கடுமையான கிண்டலுக்கு உள்ளாகிறார். இவரை வைத்து விளம்பரம் எல்லாம் செய்யப்பட்டது.

பும்ரா
பும்ராவை வைத்து செய்த சாலை விதிகளுக்கான விளம்பரம்

பின்னர் ஒருநாள் போட்டிகளில் பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார். ஆனால் ஏனோ பும்ராவுக்கு டெஸ்ட் போட்டிக்கான வாய்ப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில்கூட களமிறங்கவில்லை. கோலி மனதிற்குள் இவருக்காகவே ஒரு திட்டம் தீட்டப்படுகிறது. பும்ராவும் டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறு தனது அதிக ஓவர்களை வீசுவதற்கு உடல்வாகுவையும், மனவலியமையையும் கட்டமைக்கிறார். ஆனாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பும்ரா
பும்ரா - மலிங்கா

இந்திய அணி உள்ளூர் டெஸ்ட் தொடர்களை முடித்து வெளிநாட்டு தொடர்களில் விளையாடச் செல்கிறது. அந்த அணியில் முதன்முறையாக பும்ராவுக்கு இடம் கிடைக்கிறது. இந்தியா, வெளிநாடுகளில் எதிரணியினரின் வேகப்பந்துவீச்சுக்கு பதிலடி கொடுக்காமல் இருந்ததற்கு சேர்த்து வைத்து கொடுப்பதற்காகவே புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா என மிரட்டலான கூட்டணி செல்கிறது. நினைத்ததுபோலவே பும்ராவின் பவுன்சர்களுக்கும், யார்க்கர்களுக்கும் யாராலும் பதில் கூற முடியவில்லை. விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் எதிரணியின் 60 விக்கெட்டுகளையும் சாய்க்கிறது இந்தியப் படை.

பும்ரா
பும்ரா

ஒரு முறை வங்கதேச அணிக்கு எதிராக பும்ரா வீசிய இன் சுவிங்கர் பந்தைப் பார்த்து சிலிர்த்துப்போன நெஹ்ரா, இம்மாதிரியான பந்தை டெஸ்ட் போட்டிகளின் தொடக்கத்தில் பயன்படுத்து என அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு பும்ராவோ, என்னை யார் டெஸ்ட் போட்டிகளில் தேர்ந்தெடுப்பர் என கேட்டுள்ளார்.

பும்ரா
பும்ரா - நெஹ்ரா

நெஹ்ரா சொன்னது நடந்தது. டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடித்து பும்ரா தனது அற்புதமான பந்துவீச்சால் சாதித்துவிட்டார். தொடர்ந்து இங்கிலாந்துக்கு பயணப்படுகின்றனர். அங்கே கோலி-ஆண்டர்சன் இடையே நடைபெற்ற போட்டிக்கு இடையே பும்ராவின் பந்துவீச்சு இங்கிலாந்து அணிக்குள் மிகப்பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தியது. மூன்றாவது போட்டியில் களமிறங்கிய பும்ரா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை தனது பந்துவீச்சால் பயம் காட்டிவிட்டார் என்றே கூறலாம். எந்த இங்கிலாந்தில் நோ-பால் வீசியதற்காக கிண்டல் அடிக்கப்பட்டாரோ அதே இங்கிலாந்தில் கெத்து காட்டினார். 'நீ கெட்டவன்னா நான் உங்க அப்பண்டா' என்னும் தோரனையில் சுற்றி வந்தார் பும்ரா. அதற்குப் பிறகு ஆஸ்திரேலிய தொடரில் எல்லாம், வந்தவரை லாபம்தான் எனப் பேசப்பட்டு, அறிமுகமாகி ஒரே ஆண்டில் 10 போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் பும்ரா.

பும்ரா
பும்ரா

ஆனால் ஒவ்வொரு போட்டியின்போதும் பும்ரா முன்னேறிக்கொண்டே வந்தார். பும்ராவின் கிரிக்கெட் பயணத்தைப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரியும். ஆரம்ப காலங்களில் எதிரணி வீரர்களுடன் ஸ்லெட்ஜிங்கில் அதிகம் ஈடுபட்ட பும்ரா, மலிங்காவின் அறிவுரைகளால் அமைதியாக இருப்பதற்கு கற்றுக்கொண்டார். எவ்வளவு முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினாலும், எவ்வளவு ரன்களை விட்டுக்கொடுத்தாலும் பும்ரா தற்போது அதனைப் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதற்கு ஒரு சம்பவம் எடுத்துக்காட்டாய் அமைந்தது. சமீபத்தில் முடிந்த ஐபிஎல் இறுதியில் பும்ரா வீசிய பந்தை கீப்பர் டி காக் தவறவிடுவார். ஆட்டத்தின் முக்கிய நேரத்தில் இதுபோன்ற தவறுகளை யார் செய்தாலும் பந்துவீச்சாளர்கள் நேரடியாக முகத்தில் காட்டிவிடுவர். ஆனால் பும்ராவோ சோகமாக இருந்த டி காக்கிடம் சென்று சிரித்துக்கொண்டே இது விளையாட்டுதான், தவறுகள் நிகழ்வது இயல்பு எனப் பேசுகையில்... மொத்த இந்தியாவும் மெய்சிலிர்த்துப் போனது! அந்நேரத்தில் பும்ரா தனது சிறந்த அணுகுமுறையால் கேப்டன் கூல் தோனியையே மிஞ்சிவிட்டார்.

பும்ரா
ஐபிஎல் இறுதியில் பும்ரா - டி காக்

முதல்முறையாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக மும்பை அணியுடன் பேருந்தில் வருகையில், பும்ராவிடம் யாரைப் பார்த்து கிரிக்கெட் கற்றுக்கொண்டாய் என ஜான் ரைட் கேட்டுள்ளார். அதற்கு பும்ராவோ, வாக்கர் யூனிஸ், வாசிம் அக்ரம், ஆலன் டோனால்ட், பிரெட் லீ, அக்தர், நிடினி என சிறந்த பந்துவீச்சாளர்கள் அனைவரையும் கூறியுள்ளார். ஆம், இவர்கள் அனைவரின் கலவையும்தான் பும்ரா. கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் ஆட்டம் என விளையாடி வரும் காலத்தில் தனி ஒருவனாய் சர்வதேச கிரிகெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா.

பும்ரா
பும்ரா - ரோஹித்

இவரது வெற்றிக்குக் காரணம் கேட்டால், கடுமையான பயிற்சி என்கிறார். 'போட்டிக்கு முன்னால் நான் எனது திட்டங்களை தீட்டிக்கொள்வேன். போட்டியில் சென்று அன்றைய தினத்தில் அப்போதைய நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என நினைக்க மாட்டேன்' என ஷேன் பாண்ட்-டிடம் கற்ற பாடத்தை செயல்படுத்தி வருவதாக கூறுகிறார்.

பும்ரா
பும்ரா

உலகக்கோப்பையில் இவரது பந்தை எதிர்கொள்வதற்கு அனைத்து பேட்ஸ்மேன்களும் எவ்வளவு தயாராக வந்தாலும், அவர்களை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு பும்ரா தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு வருகிறார். சிறுவயதில் அம்மாவிடம் கேட்ட நைக் ஷூவை அடுத்த சில நாட்களில் கிரிக்கெட் போட்டியில் வென்று வாங்கியதைப் போன்று நிச்சயம் உலகக்கோப்பையில் இந்தியாவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். நீங்கள் விக்கெட் வீழ்த்தினால் விராட் கோலி எவ்வாறு கொண்டாடுகிறாரோ அதேபோல் ரசிகர்களும் ஆவலாய் உள்ளனர். ஆல் தி பெஸ்ட் பும்ரா...!

Intro:Body:

bumrah special

Conclusion:
Last Updated : May 27, 2019, 4:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.