ETV Bharat / sports

உலகக்கோப்பைத் தொடருக்கான தேர்வுக் குழுவை கிழித்தெடுத்த யுவராஜ் சிங்!

author img

By

Published : Dec 18, 2019, 10:28 AM IST

Updated : Dec 18, 2019, 10:46 AM IST

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வுக் குழு பற்றி மனம் திறந்துள்ளார்.

Yuvraj slams
Yuvraj slams

இந்தாண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்தது. இத்தொடரில் இங்கிலாந்து அணி பவுண்டரிகள் அடிப்படையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வுக் குழுவைப் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ' இந்தாண்டு இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் எனப் பல நாடுகளும் சொல்லி வந்தன. ஆனால், இந்திய தேர்வுக் குழு செய்த தவறினால் அது சாத்தியமில்லாமல் போனது. மேலும், இந்திய அணி வீரர்களின் தேர்வானது, என்னை மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருந்தது' எனக் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் அனுபவ வீரரான ராயுடுவைத் தவிர்த்து, அனுபவமில்லாத விஜய் சங்கரையும், ரிஷப் பந்தையும் தேர்வு செய்தது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்பத்தி ராயுடு உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் கூட சிறப்பாக செயல்பட்ட நிலையில், அவரை ஏன் அணி நிர்வாகம் தவிர்த்தது என்பது எனக்கு விளங்கவில்லை என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர், இந்திய அணியின் தேர்வுக் குழுவை பற்றி விமர்சனம் செய்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரங்களிடையே பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இந்த ஆண்டின் இரண்டு மிகப்பெரிய ஃபைனல்கள்... நினைவுகூறும் ஐசிசி!

Last Updated : Dec 18, 2019, 10:46 AM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.