ETV Bharat / sports

கரோனா: அப்ரிடிக்கு ஆதரவு தெரிவித்த யுவி! - Shahid Afridi

கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஈடுபட்டவரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சயித் அப்ரிடிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

Yuvraj Singh stands with Shahid Afridi in fight against COVID-19

author img

By

Published : Apr 1, 2020, 7:47 AM IST

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரசால் இதுவரை எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் பணிக்காக பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த நிதியுதவி செய்துவருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் சயித் அப்ரிடி தனது அறக்கட்டளை சார்பாக உதவிசெய்துவருகிறார். இந்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் களமிறங்கியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங், உதவி தேவைப்படும் மக்களுக்கு நாம் உதவ வேண்டிய நேரம் இது. இந்த சவாலான தருணத்தில் நம்மால் முடிந்த நிதியுதவியை நாம் செய்ய வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் அப்ரிடிக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். அவரது அறக்கட்டளைக்கு ரசிகர்கள் உங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக அளியுங்கள் என பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: நீ ஆணியே புடுங்கவே வேணாம் - பாக் வீரரை கலாய்த்த பீட்டர்சன்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.