கரோனா வைரசால் வீட்டில் முடங்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீ்ரர்கள் நேர்காணல்களில் பங்கேற்பது, ரசிகர்களுடன் உரையாடுவது என தங்களைப் பிஸியாக வைத்துள்ளனர். இதில் யுவராஜ் சிங் தினமும் ஒரு வீரருடன் உரையாடி வருகிறார். இந்நிலையில் யுவராஜ் சிங், ரோகித் சர்மாவுடன் பேசிய உரையாடல் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
அதில் சாஹல் பற்றி பேசுகையில் யுவராஜ் சிங், குறிப்பிட்ட சமூகத்தைக் குறிக்கும் விதமாகப் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். யுவராஜ் சிங் பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ட்விட்டரில் ரசிகர்கள் காட்டமாக ட்வீட் செய்து வருகின்றனர். ஏற்கனவே, பாகிஸ்தான் வீரர் அப்ரிடி நடத்தும் அறக்கட்டளைக்கு யுவராஜ் சிங் உதவி செய்ததது சர்ச்சையை ஏற்படுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.