அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் நவம்பர் 15 முதல் 24 வரை நடைபெறுகிறது. இரண்டு பிரிவுகளில் மொத்தம் எட்டு அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. இதில் பல முன்னாள் நட்சத்திர வீரர்களும், அதிரடி வீரர்களும் களமிறங்குகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங்கும் அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக களமிறங்கவுள்ளார். கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவர் அதன்பின் கனடா குளோபல் டி20 தொடரில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து டி10 தொடரில் விளையாடுவதற்காக மராத்தா அரபியன்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அபுதாபி டி10 தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் மராத்தா அரபியன்ஸ் - நார்தர்ன் வாரியர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனால் யுவராஜ் சிங் தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் பேட்டிங் பயிற்சி எடுக்கும் வீடியோ ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
-
This one for all Yuvi fans. Get ready for more of this coming live #inabudhabi @MarathaArabians @T10League #yuvrajsingh #Yuvraj pic.twitter.com/86e1ZgQLYy
— Prabhu (@Cricprabhu) November 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This one for all Yuvi fans. Get ready for more of this coming live #inabudhabi @MarathaArabians @T10League #yuvrajsingh #Yuvraj pic.twitter.com/86e1ZgQLYy
— Prabhu (@Cricprabhu) November 13, 2019This one for all Yuvi fans. Get ready for more of this coming live #inabudhabi @MarathaArabians @T10League #yuvrajsingh #Yuvraj pic.twitter.com/86e1ZgQLYy
— Prabhu (@Cricprabhu) November 13, 2019
இந்தத் தொடரில் யுவராஜ் சிங், தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். டி20 போட்டிகள் என்றாலே அதிரடி காட்டும் யுவராஜ் சிங்கிற்கு டி10 போட்டி என்றால் சொல்லவா வேண்டும்.