இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது சமி ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன் ஒரு பகுதியாக வங்கதேச அணியின் தொடக்க வீரர் ஷத்மன் இஸ்லாம், உமேஷ் யாதவ் வீசிய பந்தில் சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஹா இந்த கேட்சை பிடித்ததின் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்காக 100 (89 கேட்சுகள், 11 ஸ்டம்பிங்கள்) விக்கெட்டுகளை கீப்பிங் முறையில் செய்த, ஆறாவது இந்தியர் என்ற சாதனையைப் பெற்றார்.
-
Wriddhiman Saha takes an exceptional catch! 🤯
— ICC (@ICC) November 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The India wicket-keeper has now crossed 100 dismissals in Test cricket.
Bangladesh are in deep trouble as they lose their sixth wicket.
Follow #INDvBAN live 👇https://t.co/WIrstRq3Vm pic.twitter.com/e0Aiu1vcfc
">Wriddhiman Saha takes an exceptional catch! 🤯
— ICC (@ICC) November 22, 2019
The India wicket-keeper has now crossed 100 dismissals in Test cricket.
Bangladesh are in deep trouble as they lose their sixth wicket.
Follow #INDvBAN live 👇https://t.co/WIrstRq3Vm pic.twitter.com/e0Aiu1vcfcWriddhiman Saha takes an exceptional catch! 🤯
— ICC (@ICC) November 22, 2019
The India wicket-keeper has now crossed 100 dismissals in Test cricket.
Bangladesh are in deep trouble as they lose their sixth wicket.
Follow #INDvBAN live 👇https://t.co/WIrstRq3Vm pic.twitter.com/e0Aiu1vcfc
சஹா தனது 37ஆவது டெஸ்ட் போட்டியிலேயே இதனைச் செய்ததன் மூலம், குறைந்த போட்டிகளில் பங்கேற்று 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தினார்.
இதற்கு முன் இச்சாதனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சயீத் கிர்மானி ஆகியோர் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய அணி வீரர்களை வாழ்த்திய வங்கதேச பிரதமர்!