ETV Bharat / sports

'டி காக்குடன் நேரம் செலவிடுவதை விரும்புகிறேன்' - டேல் ஸ்டெயின் - கரோனா வைரஸ் தொற்று

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், தான் தனிமைப்படுத்தப்படும் தருணத்தில் தனது அணியின் கேப்டனான டி காக்குடன் நேரம் செலவிடுவதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

Would love to be in quarantine with Quinton de Kock: Dale Steyn

author img

By

Published : Mar 19, 2020, 3:28 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு உலக நாடுகள், வெளிநாடுகளுக்கு சென்று வரும் தம் நாட்டு மக்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தான் தனிமைப்படுத்தப்படும் தருணத்தில் தனது அணியிலுள்ள ஒருவருடன் நேரம் செலவிடுவதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் விளையாட்டு செய்திதளத்திற்கு ஸ்டெயின் அளித்த பேட்டியில், 'தனிமைப்படுத்தப்படும் தருணத்தில் நான் குவிண்டன் டி காக் போன்ற ஒருவருடன் நேரம் செலவிடுவதை விரும்புகிறேன். ஏனெனில் உலகில் எனக்கு மிகவும் பிடித்த நபர்களில் ஒருவர். நீங்கள் அவரது ஓட்டல் அறைக்குள் நுழைந்தால் அவர் மீன் பிடிப்பதற்கான தூண்டில்களை உருவாக்குவார், அல்லது மீன் பிடிப்பது போன்ற காணொலிகளைப் பார்த்துக்கொண்டிருப்பார்.

நீங்கள் அவரது வீட்டிற்குச் சென்றாலும் அவர் அதே விஷயங்களைத் தான் செய்வார். இதனால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நேரம் செலவிடுவதை நான் மிகவும் விரும்புகிறேன்' என்று தெரிவித்தார்.

கோவிட்-19 குறித்து பேசிய ஸ்டெயின், 'கோவிட்-19 வைரஸ் தொற்றால் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதிலிருந்து, இந்த உலகம் முழுவதும் பேசப்படும் ஒரே தலைப்பாக கரோனா மாறியுள்ளது. இதன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ரசிகர்கள் ஆரோக்கியமாக உங்களை வைத்துக்கொள்ளுங்கள். மேலும் உங்களது கைகளை அடிக்கடி கழுவுங்கள், உங்களை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்' என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: கிளப் உலகக்கோப்பை போட்டிகளை ஒத்திவைத்த ஃபிஃபா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.