இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீட்டர்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையாக இந்திய வீரர் ரோஹித் சர்மாவுடன் உரையாடினார். அப்போது, ரோஹித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்வின் சரிவில் இருந்ததை குறித்து மனம் திறந்தார். "2011 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி எனது சொந்த மண்ணான மும்பையில் நடைபெற்றது. இத்தைகைய தொடருக்கான இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்காததுதான் என் வாழ்வில் நேர்ந்த சோகமான தருணம். அதற்கு வேறு யாரும் காரணமில்லை. அப்போது நான் அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்ததே அதற்கு காரணம்" என்றார்.
இதனிடையே, இந்திய சுழற்பந்துவீச்சாளர் சாஹல், கெவின் பீட்டர்சன் நீங்கள்தான் எனது முதல் டெஸ்ட் விக்கெட் என கமெண்ட் செய்தார். சாஹல் இதுவரை டெஸ்ட் போட்டிகளிலேயே விளையாடியதில்லை என்பதால் ஜாலிக்காக கமெண்ட் செய்தார். இதற்கு பீட்டர்சன், சாஹல் உங்களது பந்துவீச்சை நான் கண்ணை மூடிக்கொண்டே எதிர்கொள்வேன் என பதிலளித்தார்.
இதையும் படிங்க: ஓய்விலும் சேட்டைக்கு ஓய்வளிக்காத சாஹல் - இந்த முறை நாகினி டான்ஸ்