ETV Bharat / sports

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நியூசிலாந்துடன் இறுதிப்போட்டியில் மோதுவது யார்?

author img

By

Published : Feb 3, 2021, 9:38 AM IST

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் ரத்துசெய்யப்பட்டதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பைத் தவறவிட்டது.

World Test C'ship: India must beat Eng by 2-Test margin to enter final

தென் ஆப்பிரிக்காவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் காரணமாக, அந்நாட்டு அணியுடன் நடக்க இருந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரத்துசெய்ததாக நேற்று (பிப். 2) அறிவித்தது.

இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து, தொடரிலிருந்து ஏறக்குறைய ஆஸ்திரேலியா வெளியேறிவிட்டது.

இதனால் இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் நியூசிலாந்து அணி இத்தொடரின் இறுதிப் போட்டிக்கான இடத்தை உறுதிசெய்துவிட்டது.

ஆனால், 430 புள்ளிகளுடன் முதலிடத்திலிருக்கும் இந்திய அணியும், 412 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியும் மோதும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்தான் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் அணியைத் தீர்மானிக்கும்.

  • All to play for in the upcoming India v England series with three teams able to meet New Zealand in the final of the inaugural ICC World Test Championship!

    Here's the breakdown, assuming a full 4-Test series with no ties and no further matches involving NZ or Australia 👇 #WTC21 pic.twitter.com/TTZFkPd1Ex

    — ICC (@ICC) February 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தற்போது இங்கிலாந்து அணியுடனான நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால், வரவுள்ள இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னை முதல் டெஸ்டில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.