இந்திய மகளிர் கிரிக்கெட்டில் வளர்ந்துவரும் ஆல்ரவுண்டராக விளங்குபவர் தீப்தி சர்மா. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர் தனது சிறப்பான ஆட்டத்தினால் இந்தியாவுக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்துள்ளார்.
இறுதியாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிச் சுற்றுவரை முன்னேறியதற்கு இவரது பங்களிப்பும் முக்கிய காரணமாகும். அந்தத் தொடரில் பேட்டிங்கில் 116 ரன்களும், பவுலிங்கில் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இந்த நிலையில், இந்தியாவில் பரவிவரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக இவர் 55 ஆயிரம் ரூபாயை மேற்குவங்க மாநில அரசின் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
முன்னதாக, இவரை போல 16 வயது வீராங்கனை ரிச்சா கோஷ் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். இந்தியாவில் கரோனா தொற்றுக்கு இதுவரை 1251 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் ஏப்ரல் 14வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோனி கிரிக்கெட்டுக்கு வந்தது எதற்காக? வாசிம் ஜாஃபர் பதில்