கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது.
அதன்படி அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய அலிசா ஹீலே ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி அணிக்கு அதிரடியான தொடக்கத்தை தந்தார்.
மறுமுனையில், பெத் மூனியும் தன் பங்கிற்கு அவ்வபோது பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசினார். இந்த ஜோடியின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய பந்துவீச்சு வீராங்கனைகள் திணறுகின்றனர். குறிப்பாக, ராஜேஸ்வரி ஜெய்க்வாத் வீசிய எட்டாவது ஓவரில் அலிசா ஹீலே இரண்டு சிக்சர்கள் உட்பட 16 ரன்களைச் சேர்த்தார்.
-
Healy goes for 75, the highest score in a Women's #T20WorldCup final.
— T20 World Cup (@T20WorldCup) March 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
BIG wicket for India. #T20WorldCup | #FILLTHEMCG
SCORE 📝 https://t.co/fEHpcnTek4 pic.twitter.com/jHUTsCHPJm
">Healy goes for 75, the highest score in a Women's #T20WorldCup final.
— T20 World Cup (@T20WorldCup) March 8, 2020
BIG wicket for India. #T20WorldCup | #FILLTHEMCG
SCORE 📝 https://t.co/fEHpcnTek4 pic.twitter.com/jHUTsCHPJmHealy goes for 75, the highest score in a Women's #T20WorldCup final.
— T20 World Cup (@T20WorldCup) March 8, 2020
BIG wicket for India. #T20WorldCup | #FILLTHEMCG
SCORE 📝 https://t.co/fEHpcnTek4 pic.twitter.com/jHUTsCHPJm
இதையடுத்து, ராதா யாதவ் வீசிய 10ஆவது ஓவரில் அலிசா ஹீலே பவுண்டரி அடித்து 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் ஷிகா பாண்டே வீசிய 11ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து அதகளப்படுத்தினார். இதனால் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைச் சேர்த்தது.
ஆஸ்திரேலிய அணி 11.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்களை எட்டிய நிலையில், ராதா யாதவ் பந்துவீச்சில் அலிசா ஹீலே 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதில் ஏழு பவுண்டரிகளும், ஐந்து சிக்சர்களும் அடங்கும். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் மெக் லானிங் 15 ரன்களிலும், ஆஷ்லி கார்ட்னர் இரண்டு ரன்களிலும் அடுத்தடுத்து தீப்தி ஷர்மாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
இதனிடையே, மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிவந்த பெத் மூனி டி20 போட்டிகளில் தனது ஒன்பதாவது அரைசதத்தை எட்டினார். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக பந்துவீசியதால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை 200 தாண்டாமல் கட்டுக்குள் வைத்திருந்தது.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 184 ரன்களைக் குவித்துள்ளது. பெத் மூனி 54 பந்துகளில் 10 பவுண்டரிகள் உட்பட 79 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.
இதுவரை இந்த தொடரில் ஒருமுறைக்கூட 150 ரன்களை எட்டாத இந்திய அணி இம்முறை 185 ரன்களை வெற்றிகரமாக எட்டுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஷஃபாலி வர்மா மட்டுமின்றி ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இந்திய அணி இந்த கடின இலக்கை எட்ட முடியும்.
ஆஸ்திரேலிய மகளிர் அணியின் இந்த அதிரடியான ஆட்டத்தை பார்த்தால், ஜோகனஸ்பர்க்கில் நடைபெற்ற 2003 ஆடவர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆடிய ஆட்டம் மீண்டும் கண்முன் வந்து போனதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கிளாசன் அதிரடியில் ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா!